பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவிப் பத்து இரண்டாம் பத்து 1. தrயாக தண்டனைகள் வேதனும் மாலுற கின்றனன் வேள்வியில் வேடைகொண்ட ஆதவர் கண்பல் இழந்தனர், அந்தோ அருகுகின்ற காதகன் இந்திரன் பங்கம் அடைந்து கலக்கமுற்ருன் போதகத் தேவிகின் ஆணை அதன்படி பொற்பிழந்தே. - (உ) ஞ்ான உபதேச மூர்த்தியாம் தேவி ! உன் ஆணைப்படி (தண்டிக்கப்பட்ட) பிரமன் மயங்கி கின்றன் ; வேள்விக்கு ஆசையுடன் வந்த சூரியர் கண்ணையும், பல்லையும் இழந்தனர் பக்கத்தேகின்ற கொடியவன் இந்திரன் அவமானப் பட்டுக் கலங்கினன். (கு) தகூடி யாகத்தில் - பிரமன் குட்டுண்டு விழ்க் தான். ஒரு சூரியன் கண் இழந்தான், ஒரு சூரியன் பல் இழந்தான். குயில் உருவம் எடுத்த இந்திரன் வாளால் அறுபட்டு வீழ்ந்தான். கந்தபுராணம் - யாகசங்காரப் படலம், 6-20, 21, 22, 25, 26, 28, 29. காதகன் - கொடியவன். போதகம் - உபதேசம், ஆதவர் - சூரியர்கள். 2. தேவியின் தன்மை ஒளியாகி எங்கும் உயிர்க்குயி ராகி உணர்வதுமாய்த் தெளிவாகி உள்ளும் அடியவர் காண்கின்ற செல்வமுமாய் அளிசாரு நெஞ்சில் திரு ஆடல் கொண்ட அமுதமுமாய் மிளிர்வாய் திருமுல்லை வாயிலில் வாழ்கின்ற வித்தகியே. (உ) திருமுல்லை வாயிலில் வாழும் ஞானசொரு பியே! ஒளியாகவும், உயிர்க்குயிராகவும், உணர்வாக வும், தெளிவுடன் தியானிக்கும் அடியவர் காண்கின்ற செல்வமாகவும், அன்பு ததும்பும் உள்ளத்தினர் கெஞ்