பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வைஷ்ணவி சங்கிதிமுறை சில் திருவிளையாடல் செய்யும் அமுதமாகவும் நீ விளங்கு கின்ருய் ! (கு) அளி - அன்பு. மிளிர்வாய் - விளங்குவாய். 3. உருக உன்னை நினைந்தே உருகி உருகி உணர்வுபெற என்னைரீ ஆதரித் தாட்கொள்வ தென்றென ஏங்குகின்றேன் மின்னை முன் னேவென்ற நுண்ணிடைத் தாயே விளக்கொளியே ! புன்னை வளர்பொழில் முல்லை வனத்துப் பொலன் கொடியே. (உ) புன்னைமரப் பொழில் சூழும் திருமுல்லை வனத்துப் பொற்கொடியே! உன்னை நினைந்தே உருகி உணர்வுபெற என்று நீ என்னை ஆட்கொள்வாய் என ஏங்குகின்றேன். மின்னேவென்ற இடையை உடைய தாயே! (கு) மின்னை முன்னேவென்ற நுண்ணிடை'கம்ப ராமாயணம். (மாரீசன்வதை - 76). 4. தேவியின் திருவருள் என்னையும் ஓர்பொருள் என்னக் கருதிநீ என் கனவில் இன்னகை பூண்டு துளசிஎன் நாமம் என உரைத்தாய் பின்னையும் வந்துன் திருவடி தந்தென் பிறவியெனும் இன்னலை நீக்க இரங்குதி யார்க்கும் இனியவளே ! (உ) என்னை ஒருபொருளாகக் கருதி என்கனவிற் புன்னகையுடன் வந்து 'என் பெயர் துளசி' என்று உரைத்தாய்! யார்க்கும் இனியவளாம் தேவி! நீ மறு முறை வந்து உனது திருவடியைத் தந்து என் பிறவித் துக்கத்தை நீக்கி அருளுக. (கு) தேவி - தன் பெயர் துளசி என்றதை முதற் பத்தில் 8-ஆம் செய்யுளிற் பார்க்க. இன்னல் - துன்பம்.