பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவிப் பத்து-II 113 5. ஆண்டருளுக ஒன்றை நினைந்தே உருகும் படிக்கோ ருணர்வுதந்தே என்றென ஏன்று கொண் டாண்டருள் வாய் நீ இயம்பியருள் பன்றிக் கிரங்கின பண்பன் மகிழ்கின்ற பார்ப்பதியே ! அன்றமா வாசையைப் பெளர்ணமி யாச்செய்த ஆரணங்கே ! (உ) ஒப்பற்ற ஒரு பொருளாகிய உன்னை நினைந்தே உருகும்படியான உணர்வைத் தந்து என்றைக்கு என்ஜன நீ ஏன்று ஆண்டருளுவாய்? சொல்லியருள். பன்றிக்கு இரங்கிய கருணையனும் சிவபிரான் மகிழும் தேவியே ! அன்று அமாவாசையைப் பெளர்ணமியாகத் திகழச் செய்த அம்பிகையே ! கு) 1. பாண்டியைேடு சண்டை செய்து ஒரு பன்றி அரசும், அதன் பெட்டையும் இறந்துபட, அப் பன்றிகளின் குட்டிகள் பன்னிரண்டும் முலைப்பால் இலாது வாடின ; பசியால் வருத்தமுற்றன ; அதைக் கண்ட மதுரைச் சோமசுந்தரப் பெருமானர் அக்குட்டி களுக்கு இரங்கித் தாய்ப் பன்றியின் வடிவுடன் போய் முலைப்பால் கொடுத்து அவைகளுக்கு ஞானத்தை யும், கல்வியையும் தந்து, பன்றி முகக் குமரர்க ளாக்கிப் பாண்டியனுக்கு மந்திரிமார்களாக்கினர் என்பது வரலாறு.-திருவிளையாடற் புராணம்பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த திருவிளையாடல், மந்திரிக ளாக்கிய திருவிளையாடல். (2) அமாவாசையைப் பெளர்ணமி ஆக்கினதுதேவி அலங்காரம் செய்யுள் 11-இன் குறிப்பைப் П_JГT/T5656. r தே. அ. 8