பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வைஷ்ணவி சங்கிதிமுறை 6. நல்வினைக்கு ஆளாக்குக இருவினைக் காளாய் இருந்திடும் என்றன் இழுக்கனத்தும் ஒருவிகின் பொன்னடிக் காளாம்'மனதை உவந்தருள்வாய் செருவினிற் சென்று மகிடா சுரனை முன் செற்றவளே ! மருவளர் முல்லை வனத்தமர் எங்கள் வயிணவியே! (உ) முல்லை வனத்துத் தேவியே மகிடாசுரனை அடக்கினவளே இருவினைக்கு ஆளாய் இருக்கின்ற நான் என் குறைகள் நீங்கி உன் பொன்னடிக்கு ஆளாகும்படி அருளுக. (கு) இருவினை - கல்வினை, தீவினை. ஒருவி - நீங்கி. இழுக்கு - குறைபாடுகள். செரு - போர். மரு கறு மணம். மகிடாசுரன் - தேவி அலங்காரம், செய்யுள் 16-இன் குறிப்பைப் பார்க்க. 7. உபதேசம் பெற முக்குண ஆட்சியிற் பட்டு மயங்குவேன் மும்மலத்திற் சிக்குண் டவளாய்ப் பயனிலி யாகித் திரிதருவேன் இக்குகின் செம்மொழி யாலெனக் கோர்சொல் இயம்புதிநீ அக்குடன் ஆரம் அணியும் பரன் மகிழ் ஆரணங்கே. (உ) முக்குனங்களின் வசப்பட்டு மயங்குகின் றேன். மும்மலங்களிற் சிக்குண்டு விணே திரிகின் றேன். சிவபிரான் மகிழும் தேவியே கரும்பன்ன உன்மொழி கொண்டு ஓர் (உபதேசச்) சொல்லைச் சொல்லியருளுக. (கு) முக்குணம் - ராஜசம், தாமதம், சாத்விகம். மும்மலம். ஆணவம், மாயை, கன்மம். இக்கு கரும்பு. அக்கு எலும்பு. ஆரம் - மாலை. ==