பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வைஷ்ணவி சங்கிதிமுறை அற்புதத் தோற்றத்தைக் காட்டி என்னை ஆண்ட கிருபையை என்னென்று வியப்பேன் ! (கு) அற்புதங்காட்டி ஆண்டதை அடுத்தபாடலிற் காண்க. 7. மனத்திற் கோயில் கொண்டது பரிவிலாப் பேதை என்னைப் பரிவில்ை ஆண்டு கொண்டாய் தெரியங் கனவில் தோன்றிச் சிரித்தகின் முகத்தைக் காட்டி, அரியதோர் பாடல் கேட்ட அற்புதம் என்னே என்னே எரியினில் மெழுகு போன்ற என்மனங் கோயில் கொண்டாய். (உ) அன்பிலியாகிய என்னை நீ அன்புடன் ஆண்டு கொண்டாய் ! சிரித்த முகத்துடன் என்னுடைய கனவில் தோன்றிப் பாடல் பாடுக” என்று கேட்ட அற்புத நிகழ்ச்சியை என்னென்றுரைப்பேன் ! தியி லிட்ட மெழுகு போல உருகுகின்ற என் மனத்தில் கோயில் கொண்டனை. (கு) தேவி இந்தப் பதிக ஆசிரியையின் கனவில் ஓர் அற்புதக்கோலத்தோடுதோன்றி, கான் கெளசிககோத் திரத்தினள் என் பெயர் துளசி ; என்மீது பாடுக' எனக் கேட்டனள் என்பது நிகழ்ச்சி. பின்வரும் கை விளக்கப் பாடல்'-2 பார்க்க. 8. கண்ணுேக்கம் பெற பத்துடைப் பத்தர்க் குற்ற பத்திய தில்லை ஆளுல் வித்தகம் பேச வல்லேன் வினை இலி நின்னைக் கண்டு சுத்தநல் லகத்திற் கொண்டு தோத்திரம் செய்ய கில்லேன் எத்திறம் உய்வேன் உன்றன் இணைவிழி நோக்கம் ஈவாய். (உ) பத்து இலக்கணங்களையும் உடைய பத்தர் களின் பக்தி என்னிடத்து ஒன்றேனும் இல்லை. ஆனல்