பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவிப் பத்து-III 121 சாமர்த்தியப் பேச்சுக்களைப் பேசுவேன்; உன்னைக் கண்டு சுத்தமனத்தொடு துதியேன் கான் உய்வது எவ்வாறு? தோன் கடைக் கணித்தருளவேண்டும். (கு) பத்துடைப் பக்தர்-பத்தர்களின் பத்து இலக் கனங்களாவன : 1. கண்டம் தழுதழுத்தல் 2. காஅசைதல். 3. இதழ் துடித்தல். 4. நடுக்கம் உறல். 5. மயிர்பொடித்தல். 6. அங்கம் வெதும்பி வியர்த்தல். 7. தள்ளாடி விழுதல். 8. கண்ணிர் பிலிற்றல். 9. கலுழ்ந்து இரங்கல்: 10. ஆர்வத்தால் பரவசப் படுதல். ' பத்துடையீர் ஈசன் பழ அடியிர்-திருவாசகம்திருவெம்பாவை 3. வித்தகம் பேசுதல் : (சாமர்த்தியப் பேச்சு பேசுதல்) வித்தகம் பேசவேண்டாம் பணிசெயவேண்டும் 'பெரியபுராணம் தடுத்தாட். - 41. 9. அடியார்களே தேவிக்குப் பரிவாரப் படை என்புடைச் சடையர்பெற்ற இளவலாம் முருகன் தன்னை அன்புடை மகளுக் கொண்ட வைணவி அம்மே அம்மே! பொன்படை நம்பி போற்றும் பொற்புடைக் கற்புத் தாயே! நன்படை அடியார்க் கொண்டாய் நலத்தொடு நின்னைப்போற்ற. (உ) முருக வேளின் தாயே! சிவபிரானிடம் அடிக்கடி பொன்வேண்டிப் பெற்ற நம்பியாருரர் (சுந்தரர்) போற்றின கற்புத்தாயே! நின்னைப் போற்று தற்கு அடியார்களையே பரிவாரமாக் கொண்டவளே ! (கு) தேவியின் பரிவாரம் அடியார்கள் : “இறையோன் பரிவாரமெனும் பதமேவலையே '- கந்தரநுபூதி - 37. பொன்படை கம்பி - வைணவி ஆலயத்தை கிருமித்துப் ==