பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தேவி அநுபூதி 7. கருணை புரிய சுருதிக்கும் ஒளிக்கும் கிலைச் சுடர்நீ கருதிக் கருணைக் குறிகாட் டுவையேல் பருதிக் கெதிராம் பனிநீ ரெணஇவ் வொருதிக் குமிலான் வினை ஒடிடுமே. (உ) வேதங்களுக்கும் எட்டாது ஒளிக்கும் நிலை யான ஜோதி நீ ; என்னை ஒரு பொருளாகக் கருதி, நீ உன் கருணைக் குறியை என்மீது வைத்து அருள் புரிக் தால், சூரியனை எதிரிற் கண்ட பணிபோல இந்தத் திக் கற்றவனுகிய எனது வினை மறைந்து ஓடிவிடும். (கு) சுருதி-வேதம்; பருதி-துரியன். 8. எங்ங்ணம் கன்னி நீ அண்டங்கள் அனைத்தையும் பெற்றவள் நீ எண்டங்குகற் கன்னியென் றெங்ங்னமோ விண்டங்குநர் போற்ற விளங்குகிருய் மண்டங்குகர் வாழ்த்தி மதித்திடவே. (உ) எல்லா அண்டங்களையும் பெற்றவளாகிய உன்னை மதிக்கத்தக்க நல்ல கன்னிப் பெண் என்று எக்காரணங் கொண்டோ தேவர்கள் போற்றுகின் ருர் கள்; மானிடர் உன்னை மதித்து வாழ்த்திடுகின்ருர்கள். (காரணம் தெரியவில்லையே என்றபடி). (கு) எண் - மதிப்பு ; விண் தங்குகர் - தேவர்கள் ; மண் தங்குநர் - மனிதர்கள்.

உலகுயிர் எல்லாம் ஈன்றும் பவன்பிரம சாரியாகும்,

பால்மொழி கன்னியாகும், தவக்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே. -சிவஞான சித்தியார் - பக்கம் 167.