பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி 19 இல் - தாங்கல் இல்லாத எனப் பொருள் கொண்டால் ம்ஆன மனைவியின், தாங்கல் - ஒத்துழைப்பு, இல் - இல்லாத எனப் பொருள் கூடுதலாகும். 30. கைவிடாதே இருக்கா மறை ஒ திறைவன் துணைவி ! கருக்கே விழுவேன் கனவில் ஒரு காள் திருக்கை யதையென் சிரமீ துவைத்த தருக்கை உடையேன் தனைக்கை விடலே. (உ) ரிக் வேதம் ஒதும் சிவபிரானது துணைவியே! பிறவிக் குழியில் விழும் எனது கனவில் ஒருநாள் தோன்றி உனது திருக்கரத்தை என் சிர மீது வைத்த அந்தப் பெருமிதத்தை உடைய என்னைக் கைவிடாதே. (கு) கனவில் தனது திருக்கரத்தை வைத்த தேவி - விருத்தாசலம் பாலாம்பிகை. இருக்கு - ரிக் வேதம் ; கரு - பிறவி தருக்கு களிப்பு. சிவபிரான் இருக்கு வேதம் ஒதுவர் - ஒதுவிப்பர்:பண்டு இருக்குஒரு கால்வர்க்கு நீர் உரை செய்ததே' வேதம் விரித்தோத வல்லார்' - சம்பந்தர், 2-4-7 ; 2-118-6. 31. சிவபிரான் விடை ஏறுவதேன் ? ஈறே யிலிதன் இடப்பால் மகிழ்வோய் ! ஆறே புனையும் அதிகைப் பெருமான் ஏறே றுவர்.தேர் பரிவிட் டிதுகான் . தேறேன் இதை நீ தெளிவித் தருளே. (உ) சிவபிரானது இடது பாகத்தில் மகிழ்பவளே! கங்கை சூடியாம் இறைவர் - திருஅதிகைப் பெருமாளுர்