பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வைஷ்ணவி சந்நிதிமுறை தேர், (பரி) குதிரை, இவைகளை விட்டு விட்டு, ஏறு (ரிஷபம்) வாகனமாக ஏறுகின்ருர். இது ஏன் என்று எனக்குத் தெளிவாக விளங்கவில்லை, தேவி தோன் அதை எனக்குத் தெளிவாக விளக்கி யருள வேண்டும். (கு) கடகரியும் பரிமாவும் தேருமுகந்து ஏருதே இடபம் உகந்தேறியவா(று) எனக்கறிய இயம்பேடி -திருவாசகம் 12-15. ஈறேஇலி - அந்தம் இல்லாதவன், அந்தம் இல்லான்' -சம்பந்தர், 2-115-11. அதிகை - திரு அதிகை என்னும் தலம். தென் ஆற். காடு ஜில்லா பண்ணுருட்டிக்கு அருகில் உள்ளது. 32. திரிபுரம் எரித்த விசித்திரம் விற்றங் கியகை யதுகின் வியன்கை மற்ருங் கொருகாண் வலிகை அரன்கை செற்ருர் புரஞ்செற் றதெவ்வா றதுசொல் கற்ருய் உமையே! கலகா ரணியே ! (உ) (திரிபுர சம்மார காலத்தில்) - (மேருமலையாம்) வில்லைத் தாங்கிய (இடது) கை, தேவீ ! உனது கை. வன்மை மிக்க ஒரு கானை வலித்து (இழுத்துப் பிடித்த) வலது கை சிவபிரானது கை; (இப்படி இருக்க) பகைவர் களுடைய திரிபுரத்தைச் (சிவபிரான்) (எரித்து) அழித்தது எவ்வாறு ? அதைச் சொல்லியருளுக உமா தேவியே நல்ல காரணியே! (கு) சிவபிரான் அர்த்த காரீசுரர் ஆதலால், சிவ பிரானது இட்துகை தேவியின் கை; வலதுகை சிவனது கை : இப்பாடல். பின்வரும் அப்பர் பெருமானுடைய பாடலைத் தழுவுகின்றது. -: