பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வைஷ்ணவி சங்கிதிமுறை 34. தேவியின் அன்பர்க்கு ஊனம் வராது வானம் படிலென்! கடல்வற் றி.டிலென் ! தானம் புவியே தடுமாறுதலுற் றினம் படிலென் ! எழிலார் உமையே! ஊனம் உறுமோ உனதன் பருக்கே. (உ) வானம் கீழே விழுந்தால் என்ன ? கடல் வற்றில்ை என்ன ? பூமி தான் நிலை தடுமாறுதல் அடைந்து கெடுதல் உற்ருல் என்ன? அழகிய உமையே! உனது அடியார்களுக்குக் கெடுதல் ஏதேனும் வருமோ? (ஒன்றும் வராது என்றபடி.) (கு) தானம் - ஸ்தானம்; நிலை. தான் அம்புவியே - அம்புவியே தான் - எனவும் கொள்ளலாம் : அம்புவி - பூமி. இப்பாடல் ' வானம் துளங்கிலென் மண் கம்பம் ஆகிலென் மால்வரையும், தானம் துளங்கித் தலைதடு மாறிலென். வேலை நஞ்சுண்டு ஊனம் ஒன்றில்லா ஒருவனுக்கு ஆட் பட்ட உத்தமர்க்கே ".-(அப்பர், 4-112-8)- என வரும் அப்பர் வாக்கைத் தழுவுகின்றது. 35. பாற்கடலை இழந்த திருமாலின் முறையீடு தங்காய்! அமளித் தலமென் னதைரின் பங்காளர் எடுத்தொரு பாலகனுக் கங்கா தரவோ டளித்தார் எனமால் முங்கா ரளுரில் முறையிட் டனரோ ! (உ) தங்கையே ! எனது படுக்கை இடத்தைப் (பாற்கடலை) உனது பங்கினரான சிவபெருமான். எடுத்து ஒரு குழந்தைக்கு (உபமன்யு முகிவருக்கு) அங்கு அன்போடு கொடுத்துவிட்டார்'- என்று