பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி 23 திருமால் முழுக்கடிக்கின்ற மிக்க துயரத்தோடு உன் னிடம் வந்து முறையிட்டாரோ ? (கு) முங்கு +'ஆர் + அஞர்-முழுக்கடிக்கின்ற பெருங் துயர். தேவி - திருமாலின் தங்கை அமளி - படுக்கை. ஆதரவு - அன்பு. வியாக்ரபாத முகிவருடைய குழந்தையான உப மன்யு பால் வேண்டி அழுத்போது சிவபிரான் பாற் கடலையே வரவழைத்து, அப்பாலகனுக்குத் தந்தனர் என்பது வரலாறு : பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற் கடல் ஈந்த பிரான்' --திருப்பல்லாண்டு-9."பாலகர்ைக் கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையன் :-திரு வாசகம், 14-17. 'கமல லோசனன் . . உறைதரும் ஆழிச் சேக்கை யைப், புலிக்கால் முகிவரன் புதல்வனுக்கு, கலத்தகு கருணையில் நயந்தளித்தனை-அவன், அதனல், பாயல் இன்றி நின்வாயிலில் நெடுநாள் வைகினன்' - சிதம்பரச் செய்யுட் கோவை, 76. 36. திருவடியைப் பணிவேன் வேதப் பொருளே ! விடைமேல் வருவோய் ! போதத் துருவே !' புனிதப் பரையே ! காதத் திருவே ! களினம் புரைகின் பாதத் துணைகான் பரவிப் பணிவேன் (உ) வேதப் பொருளே ! விடை வாகனம் கொண்ட வளே! ஞான சொரூபியே! பரிசு த்தமான தேவியே ஒலி உருவே தாமரை ப்ோன்ற உன் இரு திருவடிகளை நான் போற்றிப் பணிவேன்.