பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் (ராவ்பகதூர் தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை M.A. இயற்றியது) காப்பு தேவி அலங்காரம் என்னுமோர் நூலிதைச் செப்புதற்குக் காவி மலைமுரு கேசன் கழற்கே தொடக்குண்டஎன் நாவி லமர்ந்தின்று நல்ல கருத்தை நயந்தளிப்பாய் தேவி அளித்த புதல்வ கஜமுகச் சிற்பரனே ! (உரை) (வட திருமுல்லை வாயிலில் பாகோ பார்ம்' என்னும் இடத்தில் கோயில் கொண்டிருக்கும் பூந் வைணவி தேவிமேல்) தேவி அலங்காரம்' என்னும் நூலை இயற்றக் காவிமலை எனப்படும் திருத்தணிகை ஈசரின் திருவடிக்கு அடிமை பூண்ட அடியேனுடைய காவில் அமர்ந்து, யானைமுகப் பரம்பொருளே ! நல்ல கருத்துக்களை என் மீது அன்பு வைத்து அருள்வாயாக. (குறிப்பு காவிமல்ை - நீலோற்பலம் மலரும் திருத் இத்ணிகைமலை. தொடக்கு - அடிமைக்கட்டு.