பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வைஷ்ணவி சங்கிதிமுறை காப்பதற்கு வேண்டி உனது குழையை எறிந்து பூரண நிலவொளியைக் காட்டிய்ை இன்சொற் கிளியே ! திரிபுரையே ! = (கு) அபிராமிப் பட்டர் வரலாறு : இவர் மாயூரத்துக் கடுத்த திருக்கடவூரில் உள்ள தேவி அபிராமி அம்மையின் திருவருட் ப்ரசாதம் பெற்றவர். அவ் வூருக்கு வந்த மன்னன் ஒருவன் இவரை இன்று என்ன திதி ?’ என்று கேட்கத் தேவியின் பேரொளியிற் சிந்தை வைத்திருந்த இவர் 'இன்று பெளர்ணமி' என்று உரைத்தார். ஆனல் அன்று அமாவாசை; ஆதலால் யாவரும் இவரை ஏளனம் செய்தனர். அவர் தேவிபால் முறையிடத் தேவி தன் தாடங்கத்தை (குழையை) வானில் வீசப், பெளர்ணமி ஒளிபோல எங்கும் ஒளி பரக்கக் கண்டு மன்னன் முதல் யாவரும் வியந்து பட்டரைப் பெருமதிப்புடன் கொண்டாடினர் என்ப. (தேவி அநுபூதி 25-ஆம் பாடலின் குறிப்புரையை -யும் பார்க்க.) திரிபுரை.செய்யுள் 30, 52 குறிப்புரைகளைப் பார்க்க. - *. * I 12. அன்பைப் பெற ஒளவியம் பேசி அலைப்புறு கின்றேன், அழல் வணர்தம் சவ்வியம் வாழ்வோய் ! சழக்குரு அன்பதைத் தந்துதவிக் கொவ்வை நேர் செவ்வாய்க் குணவதி வைணவி! கோமளமே! இவ்வயின் என்னைப் புறக்கணி யாது நீ ஏன்றருளே. (உ) சிவனது இடது பாகத்தில் வாழுக் தேவியே கொவ்வைக் கனிபோன்ற சிவக்த வாயை உடைய குணவதியே!ைேவணவி என்னும் அழகியே அழுக்