பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 55 (உ) சிந்தாமணியாம் தேவியே : மனம் கொந்து உன்னைச் சரண் அடைந்தவர்களின் வினைகளை ஒரு கொடிப்பொழுதில் தீர்ப்பவள் நீ! கடப்ப மரம் சூழ்ந்த திருத்தணிகைக் கந்தா என்று நான் தியானிக்கும் வண்ணம் என்பாற் கருணை வைத்து அருளுக. (கு) கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றில் கிற்கும் கந்தா '-கந்தர் அலங்காரம் 79. சிந்தாமணி - விரும்பிய அனைத்தையும் கொடுக்க வல்ல தெய்வமணி. கொந்து - பூங்கொத்து. திரிபுரைசந்திர கண்டம், சூரிய கண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவையுடைய சக்கரத்துக்குத் தலைவி. (அபிராமி அந்தாதி 5-உரை). செய்யுள் 52-இன் குறிப்புரையையும் பார்க்க. 31. சம்பந்தருக்கு அருளியது காரணன் தங்கையே! நான்முகீ ! ஈஸ்வரீ ! கால்வர் புகழ் காரணன் பங்குறை நங்காய் ! கவுணியன் காணவந்த பூரணி பொற்ருளம் ஓசை பெறச்செய் புதுமையளே ! ஆரணி பிங்கலை மங்கலை ! சுந்தரி அந்தரியே! (உ) திருமாலின் தங்கையே ! அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் கால்வரால் புகழ்ந்து பாடப்பெற்ற சிவனது பாகத்தில் உறைபவளே! கவுணிய கோத்திரத்துச் சம்பந்தப் பெருமானின் முன் தோன்றி அவர் பெற்ற பொற்ருளத்துக்கு ஓசை கொடுத்த பெருமாட்டியே ! i (கு) கவுணியன் - கவுணிய கோத்திரத்து ஞான சம்பந்தர். a F சீகாழிக்கு அடுத்த கோலக்கா என்னும் தலத்தில் ஞானசம்பந்தருக்குச் சிவபிரான் பொன்தாளம் கொடுத்