பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வைஷ்ணவி சங்கிதிமுறை 35. யான் பெற்ற பேறு பெரிது கண்டதும் எங்கும் இலாததோர் இன்பம் கதித்தெழவே கொண்டதும் என்னையி. தெல்லாம் உனதருள்! கோமளம்! நீ விண்டதும் மோன முகிவர்க்கும் எட்டாத மெய்ப்பொருள்,நான் உண்டதும் ஞான அமுத ரசத்தை, உமையவளே ! (உ) தேவி கான் உன்னைத் தரிசித்ததும், என்னை நீ எங்கும் இலாத இன்பத்தைத் தந்து ஆட்கொண்ட தும் உனது திருவருட் கருணைதான் ; நீ வாய் திறந்து எனக்கு உபதேசித்தது மோனநிலையில் உள்ள முகிவர்களுக்கும் எட்டுதற்கரிய மெய்ப்பொருள்தான் : அதல்ை கான் அடைந்து அநுபவித்தது, ஞான அமுத ரசமே தான். (கு) ' எங்கும் இலாததோர் இன்பம் கம்பாலதா(க)' -திருவாசகம் 7-17. 36. என் வினையைச் சிந்துவித்தாய் சந்தனக் காப்பிட்டுன் மேனி அழகைத் தரிசித்தபின் எந்த அழகையும் பார்ப்பதற் கொவ்வேன் எழிற்கிளி என் சிந்தனை நின்றனக் காக்கினன், தாக்குமென் தீயவினை சிந்திடச் செய்தனை, எல்லாம் உனது திருவருளே. (உ) தேவி! சந்தனக் காப்பிட்ட உனது திருமேனி அழகை கான் தரிசித்த பின்னர் வேறு எந்த அழகையும் பார்ப்பதற்கு என்மனம் இடம் கொடுக்கவில்லை. என் சிந்தனையை உனக்கே சமர்ப்பித்தேன். எனது பொல்லா வினைகளை நீ போக்கினை ; இவையெல்லாம் உனது திருவருட் கருணையே. * . * =