பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 59; 37. திருவடியைப் பற்ற பற்றினைப் போக்கியுன் சேவடி பற்றப் பணித்தருள்வாய் புற்றிடங் கொண்டார் மகிழ்ந்து தழுவும் புராதனியே! உற்றுனைப் போற்றும் உணர்விலா என்னை உதறிவிட்டால் மற்றெனக் கார்துணை தாயே! திரு முல்லை வைணவியே (உ) திருமுல்லை வாயில்வாழ் வைனவித்தாயே : உலகப் பற்றுகளைப் போக்கி உன் திருவடியைப் பற்றும் பற்றை எனக்கு உதவி புரிந்தருள். சிவபிரான் மகிழ்ந்து தழுவும் தேவியே! உன்னைப் போற்ற வேண்டும் என்னும் உணர்ச்சியிலாத என்ஜன நீ உதறித் தள்ளிவிட்டால், நீ அன்றி எனக்கு வேறுயார் தான் துணை ? (ஒருவரும் இல்லை என்றபடி) (கு) புற்றிடங் கொண்டார் - வன்மீககாதர் - திருவாரூர்ச் சிவபிரான் திருநாமம். 38. சுந்தரர்க்கு அருளியது ஏத்தா திருந்தறி யாத அந் நம்பி இழந்த கண்ணன் கூத்தா வழிகாட் டெனவேண்ட மின்னற் கொடிவழியாய் ஆத்தர் நீ அன்ருெளி காட்டினை அன்னர் வழி நடக்கக் காத்தாள் பவர் நீ அலாது பிறரில்லை கற்பகமே ! (உ) சதா போற்றுதலையே தமது ஒழுக்கமாகக் கொண்ட அந்தப் பெரியார் சுந்தரமூர்த்தி சுவாமிகள், தமது கண் பார்வையை இழந்து,'கூத்தப் பெருமானே! சிவனே ! எனக்கு வழிகாட்டு என்று வேண்டின சமயத் தில் தாயே! நீ அவர்மீது இரங்கி அவர் வழிதெரிந்து, கடக்க மின்னற். கொடியாய் வழிகாட்டி உதவினை ; நீ அன்றி காத்து ஆளும் கருணை உள்ளத்தவர் வேறு யாரும் இலர்.