பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 வைஷ்ணவி சங்கிதிமுறை (கு) கம்பி - சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஒற்றி யூரில் தாம் மணந்த சங்கிலி நாச்சியாரை விட்டுப் பிரியேன் என்று சிவசங்கிதியிற் செய்த சத்தியத்தைக் கைவிட்டுச் சுந்தரர் திருஒற்றியூர் எல்லையைக் தாண்டினவுடன் அவருடைய இரண்டு கண் பார்வை யும் மறைந்தது. திருவெண்பாக்கத்தில் (இப்போது பூண்டி ரிஸர்வாயர்க் கீழ் மறைந்துள்ள ஸ்தலம்) சுவாமியிடம் சுந்தரர் முறையிட அவர் ஊன்றுகோல் மாத்திரம் ஒன்று உதவினர். அத்தலத்துத் தேவி மின்னற்கொடியாய்த் தோன்றித் தோன்றிச் சுடர் வீசிச் சுந்தரருக்குக் காஞ்சீபுரம் வரைக்கும் வழிகாண் பித்தனள் என்பது வரலாறு ; ஆதலால் தேவிக்கு

  • மின்னல் ஒளியம்மை என்று பெயர்.

39. திருவடியைப் பாட நெல்லைப் பதியினில் வாழ்சிவை யே புது நித்திலமே ! கல்லைப் புரையுமென் நெஞ்சிலும் வந்து களித்தனையே தொல்லைப் பிறவியாம் அல்லலை நீக்கி நீ சுத்த மனச் சொல்லை யளித்துன் அடிபாட வைத்திடு சுந்தரியே. (உ) திருநெல்வேலித் தலத்தில் வாழும் அழகி ! புதுமுத்தே கல்லை கிகர்க்கும் என் கெஞ்சிலும் நீ இருப்பிடம் கொண்டு மகிழ்கின்ருய் ! இந்தப் பழமை யான பிறவி என்கின்ற துன்பத்தை ஒழித்துச் சுத்த மான மனத்திற் சொற்களைத் தோற்றுவித்து உன் திருவடியைப் பாடும் பேற்றினைத் தந்தருள்வாயாக. (கு) திருநெல்வேலித் தேவிபெயர் - காந்திமதி வடிவுடையம்மை. ; கல்லைப்புரையுமென் நெஞ்சு ' கெஞ்சக் கனகல் - திணியான மனேசிலை ' எனவரும் கந்தரநுபூதியில்; தொல்லையிரும்பிறவி'- திருவாசகச் சிறப்புச் செய்யுள்.