பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வைஷ்ணவி சங்கிதிமுறை வரப் பணித்தார். வெள்ளத்தைக் கண்ட தேவி வெள்ளம் எம்பெருமான்மீது வந்து விடுமே என்று மனம் கலங்கிப் பெருமானைத் தன் இருகைகளாலும் இறுகக் கட்டித் தழுவிக்கொண்டாள். தேவியின் அன்பைக் கண்ட பெருமாளுர் தேவியின் செங்கை வளைத் தழும்பையும், கொங்கைத் தழும்பையும் தமது மேனியிற் கொண்டு குழைந்து விளங்கினர் - என்பது காஞ்சிப் புராண வரலாறு - தழுவக் குழைந்த படலம். திருகல்லூர் என்னும் தலத்தில் அடியார்க்கு ஆடை முதலிய அளித்து வந்த வணிக அன்பர் " அமர்ரிதிே ' என்பவரிடம், அவர் பக்தியை உலகின ருக்கு அறிவிக்க வேண்டிச் சிவபிரான் ஒரு அந்தன பிரமசாரியாக வந்து காம் நீராடி வரச் செல்கின்ருேம். இந்தத் தண்டிலே இரு கோவணங்கள் இருக்கின்றன. மழை வந்தால் இரண்டும் கனைக்துவிடும். ஒன்றை உம்மிடம் தருகின்ருேம். காம் திரும்பி வந்து கேட்கும் போது கொடுக்க வேண்டும் ' என்ருர், அமர் நீதி யாரும் சரியென்று வாங்கி அதைப் பத்திரமாக வைத் திருந்தார். சிறிது கேரம் கழித்து அவ்வந்தனர் வந்து ' மழையில் கனைக்து விட்டோம் ; தண்டிலிருந்த ஒரு கோவணமும் நனைந்துவிட்டது. உம்மிடம் கொடுத் ததை விரைவிற் கொண்டு வாரும் ' என்ருர். ஆனல் பெருமானர் அக்கோவணத்தை மறைத்துவிட்டார். அமர்ரீதியார் தேடித்தேடிக் காணுது வருக்தி அந்தன ரிடம் கோவனம் காணுேமே என வருந்தினர். அந்த னர் கோபித்து, இத்தண்டில் உள்ள ஈரக்கோவணம் அதன் ஜதை இதன் எடைக்கு இணையான கோவணம் கொடு என்ருர். அமர்நீதியார் தம்மிடம் இருந்த, எவ்வளவோ பட்டாடைகளைத் தராசில் வைத்தும் அந்தக் கோவன எடைக்குச் சரியாகவில்லை. தம்மிடம்