பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வைஷ்ணவி சங்கிதிமுறை கொண்டாய் என உரைத்த அன்பரைப் போல என்னையும் மதித்து நீ ஆட்கொண்டது என்ன மாயமோ ? அல்லது நான் முன் செய்த பாக்கியமோ ? (அறிகிலேன் என்றபடி) (கு) கேயர்-மாணிக்கவாசகர்; புன்புலால் யாக்கை புரை புரைகனியப் பொன்னெடுங்கோயிலாப் புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே -திருவாசகம். 37-10. 44. தேவியின் திரு அருட் சிறப்பு ஆருகக் கண்ணிர் பெருக அழுதுன்றன் ஆரருளைப் பேருகப் பெற்று மகிழ்ந்துனைப் பேசப், பிணிவினைகள் நீருகு மென்பது நிச்சயம் நிச்சயம் நிச்சயமே ஆரு தரத்தின் முடிவில் விளங்குமெம் ஆரணங்கே ! (உ) ஆறு ஆதாரங்களின் முடிவில் விளங்கும் தேவியே கண்ணிர் பெருக அழுது உனது திரு அருளைப் பேசப் பெற்ருல் பிணிவினைகள் கிச்சயமாக நீருகி அழியும். (கு) ஆறு ஆதாரம்; 1. மூலாதாரம்-(கணபதி ஸ்தானம்). 2. சுவாதிஷ்டானம் (பிரமா - சரஸ்வதி ஸ்தானம்) (3) மணிபூரகம் (விஷ்ணு-லசல்டிமிஸ்தான ம்). 4. அனகதம் (ருத்ரன் - தேவி ஸ்தானம்) 5. விசுத்தி (மகேசுரன்-மகேசுரி ஸ்தானம்) 6. ஆக்ஞை (சதாசிவம்மனேன்மணி ஸ்தானம்)