பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 65 45. கடையேற விடையேறும் வித்தகன், வெண்காட் டுறைபவன், வேலர் பிதா நடையேறு கொண்டவன் பாலமர் நாயகீ! நற்றுணையே ! மடையிேறு வாளைகள் பாய்முல்லை வாயில் வயிணவி கான் கடையேற ஒர்சொல் கழறுதி என்னிரு கண்மணியே ! (உ) ரிஷப வாகனத்தன், திருவெண் காட்டில் உறைபவன், முருகவேளின் பிதா, ஏறு போன்ற பீடுடைய கடையை உடையவன் ஆகிய சிவனது தேவியே திருமுல்லைவாயிலில் வாழும் வைணவித் தேவியே கான் கடைத்தேற ஒரு சொல் உரைப்பா யாக, என் கண்மணியே ! (கு) கடை ஏறு கொண்டவன் '-ஏறு போன்ற நடை உத்தம ஆண்களுக்கு இருக்கும். “ விடையார் கடையொன் றுடையான் ' - சம்பந்தர் 2-62-5. வெள்ளை ஏற்றின் கடையானை '-அப்பர் 6-20-2. ஏறு போற் பீடுகடை" -திருக்குறள் 59. " மடை யேறு வா8ளகள் - மடையில் வாளைபாய சம்பந்தர் 1-23-1. 46. துதி ஆரணி அம்பை அபிராமி அந்தரி ஆரணங்கே ! காரணி கெளரி குமரி குணவதி காளகண்டீ ! பூரணி பார்ப்பதி அம்மை புராணி புதியவளே! நாரணி கிட்களி நித்யகல்யாணி நவமணியே! (உ) இதன் பொருள் வெளிப்படை. --- (கு) புதியவளே-' முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுழைக்கும் பேர்த்துமப் பெற்றியனே '-திருவாசகம் 7-8. -- தே. அ. 5