பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வைஷ்ணவி சங்கிதிமுறை 47. ஆண்டருள விழிக்கே அருள்சேர் அபிராம வல்லியே! வேதமுரை வழிக்கே எனைவிடுத் தாண்டுகொள் வாயவ் வழியைவிட்டுப் பழிக்கே உழன்றிடர் கொள்ளச் செயேல் எனப், பண்மொழி : கின் மொழிக்கே உருகிடும் மேலவர் எண்ணம் முடிப்பவளே ! (உ) அருட்கண்ணை யுடையவளே ! உன்திருவாய் மொழியைக் கேட்க உருகிடும் பெரியவர்களின் எண் ணங்களை முடித்து வைப்பவளே என்னை வேதநெறி யிற் செல்லவிடு. அந்த கன்னெறியை விட்டுப் பழிக்கு ஆளாகப் புன்னெறியில் வேதனைப்படத் திரிய விடாதே ! தாயே ! (கு) புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம், கன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி கல்கி, என்னையும் அடிய ளுக்கி இருவினை நீக்கி ஆண்ட, பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங் கள் போற்றி-கந்த புராணம், 6-24-262. உழன்று - திரிந்து ; விழிக்கே அருள்சேர்' பொங்கும் அருட்கருணை விழி '-தணிகைப் புரா ணம்- குமரேச-45. பண்மொழி-தேவியின் மொழி பண் (இன்னிசை) உடையது. ' பண்ணுர் மொழி மங்கை யோர் பங்குடையான் - சம்பந்தர், 2-39-2 ' பண்ணி கேர்மொழி யாளுமை பங்கரோ '-அப்பர், 5-10-1. 48. திடபத்தி, திடபுத்தி பெற படமுள்ள நாகமும் பாதிரி கொன்றைபனிமத்தமும் இடமுள்ள தாகவே கொண்ட எம் ஈசனை ஏற்ற நங்காய் ! வடமுல்லை வாயில் இட்ங்கொண்ட வைணவீ! வஞ்சனெற்குத் திடமுள்ள புத்தி திடமுள்ள பத்தி சிறிதருளே.