பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வைஷ்ணவி சங்கிதிமுறை விட்டால் இவ்வுலகில் என்னைக் காப்பதற்கு யார் உளர் ? நாயினும் கடைப்பட்ட கான் உன் சக்கிதியில் வந்தது என் கல்வினைப் பயனே ? (கு) சேய் - குழந்தை. வேய்உறுதோள் - மூங்கில் போலும் தோள். காயிற் கடையாம் காயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் -திருவாசகம்-33-8. ' пъти9) னும் கடைப்பட் டேனை கன்னெறி காட்டி ஆண்டாய் # = -அப்பர், 4-36-6. 51. தேவியின் பெருமை கடம்பணி கந்தனை ஈன்றநற் பாவாய் ! கனிந்தமனத் திடம் பெறும் அன்பரைத் தேடி அருளும் சிவனுனைத்தன் இடம் பெற வைத்தனன் என்னே உனது பெருமையம்மா ! மடம்படும் என்றன என்றுதான் ஆள்வையோ மாதுமையே! (உ) கந்தபிரானை ஈன்ற தாயே ! திடமான பக்தியை உடைய அன்பர்களைத் தாமே தேடி அருள் புரியும் சிவபிரான் உன்னைத் தமது இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டாரெனில் உனது பெருமையை என் னென்று கூறி வியப்பது ? அறிவிலியாகிய என்னை நீ என்றுதான் ஆட்கொள்வையோ ? (அறியேன் என்றபடி). (@) கடம்பு-கடப்ப மலர். மடம்-அறியாமை. 52. ஆண்டருள் யுகமெலாம் போற்றினும் ஞானமொ டுன்னுவார்க் கன்றிஉன் றன் தகவெலாம் காணும் தகையவோ ! தாயே! தமியனென்றன் அகமெலாம் போயற ஆள்வையோ அம்மணி ஆளவந்தோய் ! செகமெலாம் சேவைசெய் வைணவித் தேவி திரிபு ரையே