பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 69 (உ) அம்மணி! என்னை ஆட்கொள்ள வந்தவளே ! ஜெகம் எல்லாம் வணங்கும் தேவி : யுகக் கணக்காகப் போற்றி செய்தாலும் ஞானத்துடன் உன்னை நினைப்ப வர்க் கன்றிப் பிறர்க்கு உன் பெருமை விளங்காது. தாயே என் ஆணவ உணர்ச்சி அற்றுப்போக ஆண்டருள மாட்டாயோ ? (கு) ஞானமொடு + உன்னுவார்க்கு - தியானிப் பார்க்கு. தகவு - பெருமை. ; காயே அனைய கமை யாண்ட தகவே உடையான்’-திருவாசகம், 45-2. அகம் - ஆணவம். செகம் - ஜெகம் - உலகு. தகையவோ-தன்மையதோ. திரிபுரை : மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள் என்பர். திரிபுரார்ணவம் என்னும் நூல் பிங்கலை, இடைகலை, சுழுமுனை’ என்னும் மூன்று காடிகளிலும் இருப்பவள் : மனம், புத்தி, சித்தம் என்னும் மூன்றிலும் உறைபவள். ஆதலின் திரிபுரை என்னும் திருகாமம் வந்தது என்று கூறும். முத்தேவர், மும்மறை, முத்தி, முச்சக்தி.... முதலிய பிரிவுகளுக்கு உரியவளாதலின் இப்பெயர் வந்ததென்று கெளடபாத சூத்திர உரை கூறும். (அபிராமி அக்தாதி 5-உரை) செய்யுள் 30-இன் குறிப்புரையையும் பார்க்க. 53. காத்தருள நெஞ்சம் சிவற்கே இடமாக வைத்து கினையுமப்பர் வஞ்சம் நிறைந்த சமணர்கள் செய்திட்ட வன்செயலுக் கெஞ்சும் படிக்கருள் பாலித்த ஈசர் இடத்துறையும் கஞ்சம் புரையுந் திருவடி யாயெனக் காத்தருளே. _ (உ) தமது கெஞ்சைச் சத்ா சிவனடியில் வைத்த் அப்பர் பெருமான் சமணர்கள் செய்த வஞ்சனைச் செயல்