பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வைஷ்ணவி சங்கிதிமுறை களில் மாளாது அவரைக் காத்த சிவனது இடதுபாகத் தமர்ந்த தேவி! நீ என்னைக் காத்தருள வேண்டுகிறேன். (கு) தமது மதத்தை விட்டுச் சைவராயினர் அப்பர் எனப் பொருமை கொண்ட சமணர்கள் சமணமதத் தைத் தழுவியிருந்த அரசரைக் கொண்டு அப்பரை நீற்றறையில் இட்டும், கஞ்சு கலந்த பாற்சோற்றினைத் தந்தும், மதயானையை அவர் மீது ஏவியும், கல்லொடு கட்டிக் கடலில் இட்டும் கொல்ல வழிதேடினர். இத்தனை ஆபத்துக்களிலும் அப்பரை மீட்டனர் சிவபிரான். வன் செயலுக்கு + எஞ்சும்படிக்கு - பிழைக்கும்படி. கஞ்சம் புரையும் - தாமரை போன்ற, 54. மனம் திருந்த ஒதிலேன் உன்றன் திருப்புகழ்ப் பாக்களில் ஒன்றினையும் காதிலே உன் புகழ்ப் பாடலைக் கேட்கும் கருத்துமில்லேன் தீதிலே சேராத உள்ளத் தவருடன் சேரகில்லேன் வாதிலே என்மனம் போகா வகையருள் வைணவியே. (உ) வைணவித்தாயே! நான் உன் திருப்புகழ்ப். பாடல்களில் ஒன்றுகூட ஒதுகின்றதுமில்லை; பாடிற்ை கேட்டதும் இல்லை. கற்குணவான்களொடு சேர்வது மில்லை. வீண் வாதங்களில் என்மனம் போகாதபடி எனக்கு அருள்புரிவாயாக! (கு) தேவியின் திருப்புகழ்ப் பாக்கள் : செளந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, அருணகிரியார் அருளிய திருப்புகழ், திருவகுப்பு ஆதிய நூல்களில் உள்ள தேவி ஸ்துதிப் பாடல்கள்.