பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வ. உ. சி.


விஞ்சும் வ.உ.சி.யும்

கலெக்டர் விஞ்சு தன்னைச் சந்திக்குமாறு சிதம்பரம் பிள்ளைக்கும் சிவாவுக்கும் ஆணையனுப்பினார். இச்சந்திப்பு 1908, மார்ச் 12இல் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு பற்றிய ஆதாரங்கள் எதுவும் இப்பொழுது கிடைக்கவில்லை. சந்திப்பு நடந்தவுடன் பாரதியார் விஞ்சு பயமுறுத்தியதாகவும், அப்பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் வ.உ.சி. பதிலளித்ததாகவும் இரு கவிதைகள் எழுதி வெளியிட்டார். அவை மக்களது விடுதலையுணர்வைச் சுவாலை விட்டெரியச் செய்தன. ஏறக்குறைய பாரதி பாடிய முறையில்தான் விஞ்சுதுரைக்கும் சிதம்பரம்பிள்ளைக்கும் இடையே உரையாடல் நிகழ்ந்திருக்க வேண்டும்.

ஏகாதிபத்தியவாதிகளின் அதிகாரவர்க்க மனப்பான்மையையும் அவர்களது விருப்பங்களையும் அதனை எதிர்க்கும் விடுதலை ஆர்வலர்களது உணர்ச்சியையும் இப்பாடல்கள் சித்தரிக்கின்றன.

கோழைப்பட்ட மக்கள், ஏழைப்பட்ட மக்கள், தொண்டொன்றே தொழிலாகக்கொண்டோர், அடிமைப்பேடிகள் இந்நிலையிலேயே மக்கள் இருத்தல் வேண்டும் என்பது ஏகாதிபத்தியவாதிகளின் விருப்பம்.

நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை மூட்டினாய், வந்தேமாதரமென்று கோசித்தாய், உண்மைகள் கூறி, “சட்டம் மீறி அடிமைப் பேடிகளை மனிதர்கள் ஆக்கினாய், கண்டகண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய், எங்கும் சுயராஜ்ய விருப்பத்தை ஏவினாய் என்பன, விஞ்சின் குற்றச்சாட்டுகள். இவை பிரிட்டிஷ் சட்டப்படியே குற்றங்கள் அல்ல. அடிமை மக்களை விழிப்படையச் செய்து, விடுதலை விருப்பத்தை அவர்கள் மனதில் தூண்டியதே விஞ்சிற்குக் குற்றமாகப்படுகிறது.

ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தை எதிர்த்து இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்காகக் கப்பலோட்டியது மாபெருங்குற்றம்.

வ.உ.சி. பதிலில் விஞ்சு குற்றமெனக் கூறும் கருத்துக்களைத் தங்கள் உரிமைகள் என வலியுறுத்திக் கூறுகிறார். வந்தேமாதரம் என்று கோஷித்தல், வெள்ளையரைத் தூசிப்பதன்று: எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்; ஆனால் “தாங்களும் மனிதர்கள் என்று உணருவது; மனித வாழ்க்கைக்குரிய உரிமைகளை விரும்புவது குற்றமல்ல என்று சிதம்பரம்பிள்ளை கூறுகிறார். பல பல தொழில்கள் செய்து எங்கள்