பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

31

வாழ்த்துக் கூறினார். ‘சிறைபுகுந்த சிதம்பரம்பிள்ளை தமிழ் கத்தார் மன்னன் என மீள்வார்’ என்ற நம்பிக்கையைத் தமிழக மக்களுக்கு உண்டாக்குகிறார். சிதம்பரம் பிள்ளை சிறையில் இருக்கும் பொழுது, அவரது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தத் தமிழகத்தார் உறுதி கொள்ள வேண்டும் என்று பாரதியார் விரும்புகிறார்.

    வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
           மன்னனென மீண்டான் என்றே
   கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ
           வருந்தலை என் கேண்மைக் கோவே!
   தாளாண்மை சிறிது கொலோயாம் புரிவேம்
           நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
   வாளாண்மை நின் துணைவர் பெறுகெனவே
           வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!

தலைவர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனையைக் கேட்டுச் சோர்ந்துபோன மக்களுக்கு உற்சாகம் உண்டாக்குவதற்குப் பாரதி ‘மீண்டும் சீக்கிரம் வருவார்’ என்ற நம்பிக்கையூட்டுகிறார். ‘நாங்கள் நீ போட்டிருந்த திட்டங்களை நீயில்லாத போதும் நிறைவேற்றுவோம்’ என்று மக்கள் சார்பில் நின்று வாக்குறுதியளிக்கிறார். வ. உ. சி. சிறையில் இறைவனுக்குத் தவங்கள் ஆற்றி வரங்கள் பெற வேண்டுகிறார். வெளியிலுள்ள தம் துணைவர்கள் வாளாண்மை (வாள் வீரம்) பெறவேண்டுமென விரும்பித் தவம் இயற்றித் திரும்ப வேண்டுமென பாரதி வாழ்த்துகிறார். இப்பாட்டில் சோகம் இல்லை, வ. உ. சி. சிறை வாழ்க்கையைக்கூட மக்கள் அரசியல் உணர்வு தாழாமல் பாதுகாக்கப் பயன்படுத்துகிறார் பாரதியார்.

அவரது சிறை வாழ்க்கையைத் தமது சுயசரிதத்தில் சிதம்பரம்பிள்ளை வருணிக்கிறார். பின்கே, தமது தீர்ப்பைப் படித்தவுடன் எதிரிகளில் சிதம்பரம் பிள்ளையையும் சிவாவையும் தவிர அனைவரையும் கோர்ட்டிலிருந்து மூன்று மைல்களுக்கப்பாலிருந்த பாளையங்கோட்டை மத்திய சிறைக்குப் போலீஸ் பாதுக்காப்போடு நடத்திக்கொண்டு சென்றனர். தலைவர்களிருவரும் ஒரு குதிரை வண்டியில் சென்றனர்.

அவர்கள் சிறைபுகும் நாளில் திருநெல்வேலியில் மக்கள் கொதித்தெழுந்து தங்கள் எதிர்ப்பை வன்முறையில் வெளியிட்டனர். மார்ச்சு 12இல் நடைபெற்ற செயல்களைவிட வீர மிக்க செயல்கள் ஜூலை 7, 8 நாள்களில் நிகழ்ந்தன. இம்முறை விஞ்சு கூட்டத்தை நோக்கிச்சுட்டான். பலர் உயிரிழந்தனர். சிதம்பரனாரின் நண்பர்கள் தூத்துக்குடிக்குத் திரும்பினர்.