பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வ.வே.சு.ஐயர்


இத்துடன் மட்டும் அவர் நிறுத்தவில்லை. பிற்காலத்தில் உருது, பிரெஞ்சு ஆகியமொழிகளையும் படித்தார். இதனால் அவர் எந்தெந்த மொழிகளை விரும்பிக் கற்றாரோ அந்தந்த மொழிகளில் பேசவும், எழுதவும், அதைக் கேட்டு மற்றவர்கள் பாராட்டும் படியான பன்மொழிப் புலமை அறிவும் பெற்றார்.

ஆரம்பக் கல்வியைப் படித்து முடித்தவுடன், சுப்பிரமணியன் உயர்நிலைப் பள்ளியிலே சேர்ந்தார். அங்கேயும் அவர் சிறந்தே விளங்கினார். படிப்பு, பண்பு, அடக்கம் ஆகியவற்றில் எல்லாரும் பாராட்டும் படியான வல்லமை பெற்றார். அதற்குப் பிறகு அவர் எழுதிய மெட்ரிக் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே அவர் ஐந்தாவது மாணவரானார்.

தந்தை வேங்கடேச ஐயர் தனது மகன் சுப்பிரமணியனைச் சிறந்த ஒரு வழக்குரைஞராகப் படிக்க வைக்க விரும்பினார்! ஆனால், அதற்குக் குறைந்த அளவு ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வழக்கம் இன்று இருப்பது போலவே அன்றும் இருந்தது. அதனால், தனது மகனை ஒரு பட்டதாரியாக உருவாக்க என்னசெய்யலாம் என்று அவரது தந்தையார் யோசனை செய்தார். பிறகு, எஃப்.ஏ.வகுப்பில் மகனைக் கல்லூரியில் சேர்த்தார்.

இன்றைக்குள்ள கல்லூரி மாணவர்களைப் போலல்லாமல், தீய பழக்க வழக்கங்களுக்குப் பலியாகி, வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாமல், தனது பெயருக்கு ஏற்றவாறு மாணவ மணியாகவே திகழ்ந்து வந்தார்! தமது தந்தையின் ஆசைக்குத் தக்கபடி கல்வியிலே கருத்தூன்றிப் படித்தார். வகுப்பிலே முதல் மாணவராகத் தொடர்ந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த பல்கலைக்கழக எஃப்.ஏ தேர்வில் சுப்பிரமணியன் முதல் வகுப்பின் மாணவராகத் தேர்வு பெற்றார். இந்தச் செய்தியை வேங்கடேச ஐயரும், காமாட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/28&oldid=1080977" இலிருந்து மீள்விக்கப்பட்டது