பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

73


கைது செய்ய முடியவில்லை. அதனால், எப்போது இந்திய சுதந்திரப் போராளிகளைக் கைது செய்யலாம், எப்படிக் கைது செய்யலாம் என்று பிரிட்டிஷ் ஆட்சி திட்டமிட்ட படியே இருந்தது. ஆனால், அந்த முயற்சி கடைசி வரை ஈடேறவில்லை.

இந்த நேரத்தில் தான், வ.வே.சு. ஐயர், புதுவை நகருக்கு வரும் தமிழ் நாட்டின் இந்திய விடுதலை வேட்கை கொண்ட இளைஞர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியைக் கற்றுக்கொடுத்து அனுப்பி வருகிறார் என்ற செய்தி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எட்டியது.

எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது போல அப்போது ஒரு நிகழ்ச்சி நடந்து, பெரும் பரபரப்பைத் தமிழ்நாட்டிலும், பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக ஆஷ் என்ற வெள்ளைக்காரர் பணியாற்றி வந்தார்! செங்கோட்டை நகரைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்ற ஒரு வன்முறைச் சுதந்திரப் போராளி, ஆஷ்துரையை மணியாச்சி என்ற நகரில் ரயில் வண்டியிலே அவன் பயணம் செய்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அதற்குப்பிறகு, வாஞ்சிநாதனும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு செத்தார் என்ற செய்தி, தமிழ்நாட்டில் ஒரு பரப்பரப்பு உணர்ச்சியை மூட்டி விட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கும் ஒரு குலை நடுக்கத்தை உருவாக்கியது.

ஆஷ் துரை என்ற கலெக்டரைச் சுட்டுக் கொன்ற வாஞ்சி நாதன் என்பவர், புதுவை நகருக்கு வந்து, மூன்று மாதங்கள் தங்கி, வ.வே.சு. ஐயரிடம் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெற்றவர் என்று செய்தி பரவியது.

நீதி மன்றத்தில் இந்தக் கொலை வழக்கு நடந்த போது, “வாஞ்சி நாதன் துப்பாக்கி சுடும் பயிற்சியை யாரிடம் பெற்றார்”' என்று நீதிபதி கேட்டார். அதற்கு, வ.வே.சு.ஐயரிடம் தான் அவர் சுடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/75&oldid=1083856" இலிருந்து மீள்விக்கப்பட்டது