பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஹிராடெடஸின்


இவருக்கு முன்பு வேறு யாரும் எந்த வித வரலாற்றையும் எழுதவில்லையா? என்று கேட்கக் கூடும்.

ஹிராடெடசுக்குப் பின்னர், சில நூற்றாண்டுகள் ஓடி ஓய்ந்த பின்புதான், வரலாறு ஒரு வரம்போடு, ஒழுங்காக, விவரமாக எழுதவே துவங்கப்பட்டது. எனவேதான், சரித்திரத்தினை எழுதப் புகுந்தவர்களுள் ஹிராடெடஸ் முதன்மையானவர் என்ற பெயரைப் பெற்றார். இக் காரணத்தால் தான் ஹிராடெடசை வரலாற்றின் ஆதித் தந்தை என்று வரலாற்று உலகம் வாழ்த்துகிறது; போற்றுகிறது!

வரலாற்றுச் சம்பங்கள் ஒவ்வொன்றும் அழிந்து விடாமல் காப்பாற்றப் படவேண்டும். என்று, அவர் ஏன் குறிப்பிட்டார் என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும்.

வரலாற்றை எழுதிய வரலாற்று மேதை ஹிராடெடசினுடைய வாழ்க்கைக் குறிப்புக்கள், அவரது வாழ்க்கைச் சம்பங்கள், சரியாகவே இன்றும் கூடக் கிடைக்கவில்லை என்றால், அவர் எழுது கோலை ஏந்திய போது மட்டும் எப்படிக் கிடைத்திருக்க முடியும்? அதனால்தான், வரலாறு எழுதும் போது தான் அனுபவித்த அவல அனுபவங்களை எண்ணி, எதிர்கால உலகத்திற்கு அறிவுரை கூறும் எண்ணத்தில், வரலாற்று நிகழ்ச்சிகளை அழிந்து போகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு ஓர் அடையாளமாக தனது நூல் அமையவேண்டும் என்ற சிந்தனையிலே அவர் தனது ‘வரலாறுகள்’ என்ற நூலை எழுதிக் காட்டினார்.

கிரேக்க நாட்டிற்கும் பாரசீகப் பேரரசகளுக்கும் இடையே நடந்த போர்க்களை நிகழ்வுகளையே அவர் ‘வரலாறு’ என்று பெயரிட்டார். பாரசீகர்களின் பழக்க வழக்கங்களையும், பாபிலோனிய மக்கள், எகிப்தியர்கள், இந்தியர்கள், பினீசியர், லிபியர் போன்ற மற்ற பிற மன்னர்களின் அன்றைய பழக்க