பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஹிராடெடஸின்


கூறினால், அவற்றைக் கற்பனைகளே என்று பகிரங்கமாகக் அறிவிடும் பண்பாளர், அவர் புத்தகங்கள் அப்போதே மக்களால் புகழுடன் போற்றப்பட்டன என்பவை மட்டுமன்று, இவை போன்ற வரலாறுகளைப் போல வேறு வரலாறுகள் ஏதும் அக்காலத்திலே தோன்றவில்லை.” கிடைக்கவில்லை.

“ஹிராடெடஸ் எழுதிய ‘வரலாறுகள்’ எல்லாம், உரைநடையில் கதையைப் போலவே இருந்ததால் மக்களில் பலர் மனப்பாடம் செய்தார்கள். அவரைச் சுற்றி வாழும் மக்களின் மனப்பாங்குகளை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். மூடநம்பிக்கை உடையவர்களாக இருந்தால் - அந்த நம்பிக்கையை அவர் எதிர்க்க மாட்டார்.

ஹிராடெடஸ் கல்விமான்களோடு நெருக்கமாகப் பழகுபவர் மட்டுமல்லர், அவர்கள் இடையேயும் தனக்கிடையேயும் ஓர் அறிவுப் பாலத்தை உருவாக்கிக் கொள்பவர். அதனால், அவருக்குள் இலக்கிய இலக்கண வளம் வளர்ந்தது. அப்போதைய ஏதென்ஸ் நாடும் இவரைப் போன்றவர்களால் இலக்கிய வளம் பெற்றதாகவே இருந்தது. அவர் மிகுந்த நுண்ணறிவுடையவர், நடுநிலையிலே நின்று எந்தச் செய்திகளையும் சேகரிக்கும் வல்லமை ஹிராடெடசிடம் இருந்தது. எதிலும் அவர் அவசரப்படமாட்டார்.

“மனிதர்கள் இடையே எப்போதும் குறைகள் இருந்து கொண்டுதான் இருக்கும், அவனை முழுமையாக்கிடத் தானே நாம் நூல்களை எழுதுகின்றோம் என்ற அடிப்படைச் சிந்தனை ஹிராடெடசிடம் எப்போதும் உண்டு. அவரது நூலும் குறைகளும் நிறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.” என்று குறிப்பிட்டவர் வரலாற்றாசிரியர் ‘தூசிடைடிஸ்’ என்பவர்.

ஹிராடெடஸ் வரலாற்று, ஞானியானதால், அவர் நல்ல கதைகளை என்றால், உடனே தனது நூலுக்குள் அடக்கிக்