நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
25
யெல்லாம் நாம் நோக்கினால், சில உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
பினீசிய மக்கள் என்று அழைக்கப் படுவோர், முதன் முதலில், பண்டைய காலத்தில், இப்போது கூறப்படும் இந்து மகா சமுத்திரம் என்ற கடற்கரை முனையிலே இருந்து வந்து குடியேறியவர்கள் ஆவர்.
மத்திய தரைக் கடல் வழியாகப் புகுந்து, அங்கு தங்கள் இருப்பிடத்தை அவர்கள் அமைத்துக் கொண்டார்கள். இன்றைக்கும் அம் மக்கள் அங்கே தான் இருக்கிறார்கள் - வாழ்கிறார்கள். அவ்வாறு அவர்கள் ஏன் வந்தார்கள் என்றால், வியாபாரம் தான்! நாட்டுக்கு நாடு வாணிகம் செய்து, திரை கடலோடி திரவியம் தேடுவது அந்த மக்களின் மூதாதையர்களது வழிவழிப் பண்பு. அதனால், தங்களது மரக் கலங்களில் எகிப்திய, அஸ்ஸிரிய நாட்டுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஆர்கோஸ் என்பது போன்ற மிகச் சிறந்த பெரிய கடற்கரை நகர்களுக்குச் சொன்றார்கள். அந்த ஆர்ககோஸ் என்ற நாடு, இன்று பொதுவாக ஹெல்லஸ் HELLAS என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் ஆர்கோஸ் நகருக்குக் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அந்த நகரத்து மக்களது காட்சிக்காகப் பரப்பி வைத்தார்கள். ஆதி காலத்தில், காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்ட நிலையிலே தான் வணிகம் நடை பெறுவது வழக்கமாகும். அதே போன்றே ஆர்கோஸ் நகர மக்களது வணிகத்துக்காகவும் கொண்டு வந்த பொருட்கள் கடைபரப்பி வைக்கப்பட்டது. அந்தப் பொருட்கள் எல்லாம் சில தினங்களில் விற்கப்பட்டு விடும்.
இந்த கண்காட்சிக்குப் பொருள்களை வாங்குவதற்காக அழகான, பணக்காரர்கள் முதல் சாதாரணமானவர்கள் வரை வந்து கூடுவர். அரசர் ஜனாகஸ் என்பவரின் மகளான அயோ