பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஹிராடெடஸின்


என்பவளும் தனது குழுவினருடன் வந்தருந்தாள். அந்த நேரத்தில் பெண்களுள் பலர் கப்பலின் பின்புறத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது, பினீசிய மாலுமிகள் ஒருவருக்கு ஒருவர் கண்ணடித்துக் கொண்டு திடீரெனப் பெண்கள் கூட்டத்துள் பாய்ந்தனர்!

பயந்த பாவையர் பலர் ஓடியது போக, இளவரசி அயோவும், அவளுடன் இருந்த சில பெண்களும் மாலுமிகளால் கவரப்பட்டு, கை கால்கள் கட்டப்பட்டு, கப்பலில் ஏற்றப்பட்டு எகிப்து நாட்டிற்குக் கடத்திச் செல்லப்பட்டார்கள்.

அயோ என்ற ஓர் அரசரின் மகள் இப்படித்தான் எகிப்து நாட்டுக்குக் கொண்டு வரப் பட்டாள் என்று பாரசீக வரலாறு கூறுகிறது. இந்த விவரமே படிப்பதற்கும், கேட்பதற்கும் எரிச்சலும், கோபமும் கொந்தளிக்கும் சம்பவமாக உள்ளது. ஆனால், கிரேக்கர்கள் இதை வேறு விதமாகக் கூறுகிறார்கள்.

இந்தச் சம்பவம் நடந்து முடிந்த பிறகு, கிரேக்கர்கள் சிலர், பெரும்பாலும் அவர்கள் கிரீஸ் நாட்டினராகவும் இருக்கலாம். பீனிசியக் கடற்கரைகளில் இருந்த ‘தீரே’ துறைமுகத்தில் ஆர்கோஸ் நகரில் பரப்பி வைத்த காட்சிப் பொருள்களைப் போலவே இங்கும் கடை விரித்தார்கள். அப்போது, அந்தக் காட்சிக்கு பொருட்கள் வாங்க வந்த அந்த நாட்டு அரசரின் மகளான யூரோபா என்பவளை வலுக்கட்டாயமாகத் தங்களது கிரேக்க நாட்டிற்குக் கடத்திச் சென்று விட்டார்கள். இப்படிப்பட்ட பெண்கள் கடத்தும் போட்டா போட்டியிலே இரு நாடுகளும் ஈடுபட்டுக் கொண்டன.

கிரேக்கர்கள் மறுபடியும் ஓர் அடாத செயலைச் செய்தார்கள். அதாவது, பாசிஸ் என்ற ஆற்றின் கரைமீது கோலஷிஸ் எனும் நாட்டுத் துறை முகத்தில் இருந்த ‘இய’ (AEA) என்ற இடத்தில் பொருட்களைச் சந்தையாக்கிட கிரேக்க மக்கள் ஏற்றிச் சென்றார்கள். அங்கே பொருட்களை விற்று அவர்கள் வாணிகம்