பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ஹிராடெடஸின்பினீசியாவில் வசித்து வந்த மக்களுக்குப் பினீசியர் என்று பெயர். பினீசியா நாடு என்பது எப்பகுதியில் அமைந்துள்ளது? சிரியா நாட்டின் கடற்கரைப் பகுதி தான் பினீசியா. மத்திய தரைக் கடல் பகுதிக்கும், லெபனானுக்கும் இடையிலே அமைந்துள்ள நாடு இது. பினீசியா என்ற பெயர் கிரேக்க மொழிச் சார்புடையது. அந்தக் கிரேக்க ஆதாரம் தமிழ் மொழியின் மூலத்தைக் கொண்டது. எனவே, பினீசியா என்ற சொல், இந்தியத் தமிழ் வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியதாகும். அதுமட்டுமல்லாமல், பினீசியா சிவந்த, சிகப்பான எனும் பொருள்களை உடையது கிரேக்க மொழியிலே இருந்து பிறந்த ஒரு சொல்லாகும்.

இதற்குரிய சான்று தேவைதானே! அதற்கு சிந்தனையாளரும், வரலாற்றாய் வானருமான ‘பெரிப்ளுஸ்’ என்பவரது கருத்து இதோ.

“பினீசியர்கள் சிவந்த பொருள்களை வாணிகம் நடத்தியவர்கள்; குருலிந்தக் கல், சிவந்த ஆடைகள், குங்கிலியம், பெரில் முதலியவை இந்தியாவிலே இருந்து எகிப்து நாட்டுக்கும், மற்ற மேல் நாடுகளுக்கும் தீரோ, சீதோன் துறைமுகங்களிலிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.” என்கிறார் தனது நூலின், அதிகாரம் ஆறில்.

பினீசியர்கள் கடல் வியாபாரத்திலும், கப்பல்களைச் சிறப்பாகச் செலுத்துவதிலும் வல்லவர்கள் என்ற புகழைப் பெற்றவர்கள். பல குடியேற்றங்களை உண்டாக்கியவர்கள். அவர்கள் நாட்டின் துறைமுகப்பட்டினங்கள் தீரே, சீதோன் என்பனவாகும்.

பிளினி என்ற யாத்ரிகரும், பழைய விவிலிய நூலில் உள்ள ‘தீர்ப்புகள்’ பகுதியும், பினீசியர் வரலாற்றுக் குறிப்புகளை வலியுறுத்திப் பேசுகின்றன.

பினீசியர் என்ற பெயருக்கு வேறு ஓர் பொருளும் ஆதாரமும் இருக்கின்றது. “இந்து மகா சமுத்திரத்தின் தென் முனையிலே