பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

61


மட்டும் செய்யுங்கள். கொள்ளையடித்த பொருள்களை ஒப்படைக்கும் போது, அதில் பத்தில் ஒரு பாகம் ஜியுஸ் கடவுளுக்குக் கொடுக்கப்படும்! என்று ஓர் அறிக்கை விடுங்கள். கடவுள் நம்மைத் தண்டித்து விடுவாரோ என்ற பயத்தால், எல்லாப் பொருட்களையும் உங்களிடம் சேர்த்து விடுவான். பிறகு அவற்றிலே இருந்து பத்தில் ஒரு பகுதியை ஜீயுஸ் கடவுளுக்குத் தெய்வக் கொடையாகக் கொடுத்து விடுங்கள்” என்றார் குரோசஸ். மன்னனும் அவ்வாறே உத்தரவை அனுப்பி வைத்தான்.

மன்னன் சைரஸ் குரோசஸ் அறிவுரையைக் கேட்டு முழு மகிழ்ச்சி அடைந்தார். கொள்ளைப் பொருள்கள் ஒழுங்காக வந்து சேர்ந்தன. கொள்ளை வந்த பொருள்களில் ஒரு பகுதியையும் குரோசஸ் பிணைக்கப்பட்ட இரும்புச் சங்கிலியையும் அவர் வேண்டிக் கொண்டதற்கு ஏற்றவாறு டெல்பி கோயிலுக்கு மன்னர் சைரஸ் அனுப்பி வைத்தார்.

அப்பொழுது டெல்பி கோயிலில் எழுந்த அசரீரி, “இங்கு கடவுளர்கள் விதிவிலக்கற்றவர்களே! அவர்களும் துன்பத்தை ஏற்றே ஆக வேண்டும் சார்டிஸ் நகரம், குரோசசின் மகன்கள் காலத்தில் இழக்கப் பட்டிருக்கலாம். அப்படியில்லாமல், குரோசசே தம் நகர அழிவைக் காண வேண்டுமா என்றால், யாரும் கடவுள் விருப்பத்தை தடுத்து நிறுத்தி விட முடியாது. குரோசசை எரிநெருப்பிலே இருந்து காப்பாற்றியதும் அதே கடவுளே தானே! என்றது.

குரோசஸ், பலவகைப் பரிசுப் பொருட்களை கிரேக்கக் கோயிலுக்கு அனுப்பியதுடன், ஒரு தங்கப் பசுவையும், தங்க ஈட்டியையும், சைரஸ் மன்னனால் தான் பிணைக்கப்பட்ட இரும்புச் சங்கிலியையும், மற்றும் பல விலை உயர்ந்த பொருட்களையும் அனுப்பிவைத்தார்.