பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. ஆஜியஸ் மன்னனின் தொழுவங்கள்


அந்தக் காலத்தில் ஈலிஸ் நகரத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஆஜியஸ் மன்னனிடம் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இருந்தன. அவைகளில் கறுப்புக் காளைகள் முந்நூறும், சிவப்புக் காளைகள் இரு நூறும் இருந்தன. வெள்ளியைப் போல வெண்மையான முரட்டுக் காளைகள் பன்னிரண்டும் இருந்தன. இநத மயிலைக் காளைகள் மற்றவைகளுடன் மலைகளிலே மேயும்பொழுது, சிங்கம் முதலிய கொடிய விலங்குகள் வந்தால், அவைகள் பன்னிரண்டும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அவ்விலங்குகளைக் கொம்புகளால் குத்திப் போராடும் அளவுக்குப் பலமுள்ளவை. ஆஜியஸ் மன்னனிடம் இருந்தவைகளைப்போல் அவ்வளவு அதிகமான கால்நடைகள் உலகிலே எவரிடமும் இருக்கவில்லை. அவைகள் எல்லாம் பகலிலே மலைக் காடுகளில் மேய்ந்துவிட்டுத் திரும்பி வந்தபின் இரவில் அவைகளை அடைத்துவைப்பதற்காக அம்மன்னன் வரிசை வரிசையாக நூற்றுக்கணக்கான தொழுவங்கள் கட்டியிருந்தான்.


ஆஜியஸ் சூரிய தேவனான ஹீலியஸின் மைந்தன். அதனால் அவன் சில வரப்பிரசாதங்கள் பெற்றிருந்தான். அவனுடைய கால்நடைகளுக்கு நோய்நொடிகள் தோன்றுவதேயில்லை. நன்றாகக் கொழுத்து வளர்ந்த அந்த ஆடுகளும் மாடுகளும் அவனுக்கு வற்றாத செல்வத்தை அளித்து வந்தன. ஆனால், அவைகளுடைய தொழுவங்கள் மட்டும் பல ஆண்டுகளாகச் சுத்தம் செய்யப்படாமலே இருந்து வந்தன. ஒவ்வொரு தொழுவத்திலும் சாணமும், பிழுக்கையும், சண்டும், கூளமுமாகக் குப்பைகள் மலை மலையாகக் குவிந்திருந்தன. ஒவ்வொரு நாளும் அவைகளை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்வதானால், ஆயிரக்கணக்கான வேலைக்காரர்கள் தேவைப்படுவார்கள். அவைகளால் தொழுவங்களிலிருந்த கால்நடைகளுக்கு நோய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/40&oldid=1033790" இலிருந்து மீள்விக்கப்பட்டது