பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

39


ஹெர்க்குலிஸ், தனக்கு ஒரு கோடரியும் மண்வெட்டியும் வேண்டுமென்று சோல்லிவிட்டு, வெளியே வந்தான். அப்பொழுது ஆஜயஸின் பன்னிரண்டு காட்டு வெள்ளைக் காளைகளில் முதன்மையாக விளங்கிய காளை அவனைப் பார்த்துச் சீறிக்கொண்டு பாய்ந்து வந்தது. அவன் எப்பொழுதும் சிங்கத்தோலையே ஆடையாகப் போர்த்திக் கொண்டிருப்பது வழக்கமாதலால் , அத்தோலின் வாசனையை அறிந்து, அவனையே சிங்கமென்று அந்த மாடு கருதிவிட்டது. வெள்ளைக் குன்று உருண்டு வருவது போல் தன்மேல் வந்து பாய்ந்த அக்காளையின் இடப் பக்கத்துக் கொம்பு ஒன்றை ஹெர்க்குலிஸ் இரு கைகளாலும் பிடித்து, அதன் கழுத்தை வளைத்து, தலை தரையில் தோயும்படி தன் உடல் வலியால் அழுத்திப் பிடித்துக்கொண்டான். அப்பொழுதுதான் அந்தக் காளை சிங்கத்தினும் சிறந்த விரன் ஒருவான் இருக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டது. சிறிது நேரத்திற்குப்பின், ஹெர்க்குலிஸ் அதை, விட்டு விட்டுத் தன் வேலையைக் கவனிப்பததற்காகப் புறப்பட்டான்.


அரண்மனைக்கு வெளியே வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அரசனும், அவன் குமாாரகளும், ஏவலர்களும் ஹெர்க்குலிஸ் நோாகத் தொழுவங்களுக்குச் செல்லப் போகிறான் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவன், கோடரியையும் மண் வெட்டியையும் எடுத்துக்கொண்டு, ஆற்றின் கரை வழியாக மலைவரை நடந்து சென்றான். பிறகு வழியில் தான் குறியிட்டிருந்த ஓர் இடத்திற்குத் திரும்பி வந்து, தான் அணிந்திருந்த சிங்கத்தோலைக் கழற்றி வைத்துவிட்டு, அவன் வேலை செய்யத் தொடங்கினான். முதலில் அவன் ஒரு பெரிய மரத்தை வெட்டிச் சாய்த்து, அதன் கிளைகளையும், அடிமாத்தையும் நீண்ட உருளைக் கட்டைகளாக வெட்டி ஒரு பக்கத்தில் அடுக்கி வைத்தான். பிறகு மண் வெட்டியை எடுத்துக்கொண்டு, அவன் அவன் ஆற்றின் கரையில் ஒரு பகுதியை வெட்டி ஒரு வாய்க்கால் தோண்டத் தொடங்கினான். அந்தப்பக்கத்தில் முன்பு ஒரு வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்த தடத்தை அவன் முதலிலேயே பார்த்து-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/43&oldid=1033797" இலிருந்து மீள்விக்கப்பட்டது