பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

67

கைகளில் வைத்துக் கொண்டிருந்தான்; பிறகுதான் அவனுடைய உடலைக் கிழே எறிந்தான்!


இதற்குப் பின்பு ஹெர்க்குலிஸ் எகிப்து நாட்டுக்குச் சென்றான். அங்கே ஆன்டியஸின் சகோதரனான புசிரிஸ் ஆட்சி புரிந்து வந்தான். முன்பு ஒரு சமயம் அந்த நாட்டில் ஏழு, எட்டு ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்டிருந்ததால், அவன் ஆண்டுதோறும் சீயஸ் கடவுளுக்கு ஒரு மனிதனைப் பலியிட்டு வந்தான். அவனுடைய பூசாரிகள் ஹெர்க்குலிஸைக் கண்டதும், அந்த ஆண்டில் அவனையே பலி கொடுத்துவிடலாம் என்று கருதினார்கள். அவனும், அதற்கு ஏற்றார் போல் ஏதும் அறியதவனாக நடித்தான். அவர்கள் அவனை எளிதில் கட்டிக்கொண்டு சென்று, பலி பீடத்திலே ஏற்றி வைத்தனர். மன்னனும், இளவரசனும் விழாக் காண வந்திருந்தனர். ஹெர்க்குலிஸ் ஒரு பூசாரி தன் தலைக்கு மேலே கோடரியை ஓங்கியதும், திடீரென்று தன்னைப் பினித்திருந்த கயிறுகளை அறுத்துக்கொண்டு வெளியே துள்ளினான். அங்கிருந்த பூசாரிகள் அனைவரையும் வதைத்துவிட்டு, அவன் அங்கிருந்து வெளியே சென்றான்.


இதற்கு அப்பால் அவன் ஆசியாவின் சில பகுதிகளைச் சுற்றிக் கொண்டு, கிரேக்க நாட்டுக்கு மீண்டு சென்றான். மைசீனில் அவன் மூன்று தங்க ஆப்பிள்களையும் யூரிஸ்தியஸிடம் சேர்ப்பித்தான். அவன் அவைகளை மீண்டும் ஹெர்க்குலிஸிடமே கொடுத்து விட்டான். அவன் அவைகளை அதீனா தேவி மூலம் ‘ஹெஸ்பிரைடுகள்’ என்ற ஹீராவின் காவல் கன்னியர்களுக்கு அனுப்பி வைத்தான். ஹீரா தேவியின் பொருள்களாகிய அக்கனிகளை அக்கன்னியர்களிடமிருந்து பறிப்பது பாவம் என்பதனாலேயே இவ்வாறு செய்யப் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/71&oldid=1074326" இலிருந்து மீள்விக்கப்பட்டது