பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

ஹெர்க்குலிஸ்


தூதன் உடை கேட்டு வந்ததும், அவள் உள்ளே ஓடி பெட்டியைத் திறந்து ஹெர்க்குலிஸ் அணியக்கூடிய புனித உடையை வெளியே எடுத்தாள். அப்பொழுது பெட்டியிலிருந்த மருந்துச் சிமிழை அவள் கண்டுவிட்டாள். உடனேயே சென்டார் சொல்லிய சொற்கள் அளுடைய நினைவுக்கு வந்தன. நாயகனைத் தன்னுடன் இனை பிரியாமலிருக்க வழி செய்துவிட வேண்டும்! என்று அவள் தீர்மானித்தாள். அவள், கையிலே கொஞ்சம் கம்பள ரோமத்தை எடுத்து. அதைச் சிமிழிலிருந்த மருந்தில் தோய்த்து பிறகு அதை நாயகன் அணிந்துகொள்ளக் கூடிய பட்டிலே தேய்த்தாள். அதற்குப்பின், பட்டு உடையை ஒரு பெட்டியிலே வைத்து, அதை அவள் தூதனிடம் கொடுத்தனுப்பினாள்.


தூதன் சென்று சிறிது நேரம் கழிந்ததும், அவள் வீட்டு முற்றத்தில் தான் வீசியெறிந்த கம்பளம் தீப்பற்றி எரிவதைக் கண்டாள். அது எரியும் பொழுது ஒரு விஷ வாடையும் வீசிற்று. உடனே அவளுடைய நெஞ்சில் இடி விழுந்தது போலாயிற்று. அவள் பதைபதைத்தாள், அழுதாள், துடித்தாள். தான் அனுப்பிய உடையால் ஹெர்க்குலிஸுக்கு என்ன நேருமோ என்று அவள் அஞ்சினாள். சென்டார் வேண்டுமென்றே தன்னை மோசம் செய்திருந்தான் என்பதை அவள் அப்பொழுதுதான் உணர்ந்துகொண்டாள்; உடனே ஒரு குதிரை வீரனை அனுப்பி தான் அனுப்பிய உடையை ஹெர்க்குலிஸ் அணிய வேண்டா என்று சொல்லும்படி செய்தாள்.


யாக சாலையில் ஹெர்க்குலிஸ் உடை வரவில்லையே என்று ஆத்திரத்தோடு காத்து நின்றான். தூதன் பெட்டியைக் கொணர்ந்ததும், அவன் அவசர அவசரமாக அதிலிருந்த ஆடையை எடுத்து அணிந்துகொண்டான். யாகம் தொடங்கிற்று. பலிக்குரிய மாடுகள் யாவும் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. ஓம குண்டங்களிலே அக்கினி கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. முதலில் ஹெர்க்குலிஸ் பன்னிரண்டு மாடுகளைப் பலியிட்டான். ஓம குண்டங்களிலே அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/80&oldid=1034966" இலிருந்து மீள்விக்கப்பட்டது