பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


வேலூர்ப் புரட்சி 3i ______________________________________________________________________________________ பட்டனர். புரட்சி நடைபெற்ற வேலூர்க் கோட்டையின் மேற்குத் திசையிலே நாகரிகக் காட்டு மிராண்டி வெள்ளையரால் மிகக் கோரமான முறையில் நாயும், நரியும், காக்கையும், கழுகும் சான்றாக நிற்க, விடுதலை வீரர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

புரட்சியில் பங்கு கொண்ட முக்கியமான வீரர்களுட் சிலரது கதி இதுவாக, புரட்சி புரிந்த இருபடைப்பிரிவைச் சார்ந்த வீரர்கள் தொகுதியாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் பொன்னுடலை அழித்ததோடு ஆறுதல் கொள்ளாத அயல் ஆட்சி, இராணுவப் பட்டியல்களில் அவர்கள் பேரும் இல்லாதபடி அழித்து ஒழித்தது. வேலூர்ப்புரட்சி காரணமாகத் தமிழகம் எங்கணும் கைது செய்யப்பட்ட கணக்கற்ற வீரர்கள் பல மாதங்கள் வரை விசார்னையின்றிச் சிறையில் வைக்கப்பட்டுச் சித்திரவதையும் செய்யப்பட்டார்கள். புரட்சியைத் தூண்டியும், அது நடைபெற்ற காலத்தில் வீரர்களுக்கு வெற்றியின்மேலிருந்த வேட்கையில் தின்பண்டங்கள் வழங்கியும், படைக்கலங்கள் தந்தும், தலை சிறந்த புரட்சியாளன் ஒருவனுக்கு வீர வாள் ஒன்றைப் பரிசாக அளித்தும், பல்வகையாலும் ஊக்கம் ஊட்டிய திப்புவின் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் துண்டு துண்டாக்கவே துடித்தது ஆங்கில ஆட்சி. என்றாலும் 'இன்று கோட்டையிலே பொங்கிய தீ நாளை குடிசைகளிலெல்லாம் பொங்குமானால் என்