பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப்பாயிரம்

(௭)

கியே நிற்கும். அது வட்டஞ் சதுர முதலிய முப்பத்திரண்டனுளொன்றை யுணர்த்தும்-மனத்தா னுணரு நுண்ணுணர் வில்லோரு முணர்தற் கெழுத்துக்கட்கு வேறுவேறு வடிவங்காட்டி யெழுதப்பட்டு நடத்தலிற் கட்புலனாகிய வரிவடிவு முடையவாயின.

இதற்கு விதி, ‘யுட்பெறு புள்ளி யுருவா கும்மே’

யென்னுஞ் சூத்திர முதலியனவாம். — இவ்வாற்றாற் பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார். உயிர்க்கும் ‘எகர ஒகரத் தியற்கையு மற்றே’ யென வடிவு சிறுபான்மை கூறினார். இனித் தன்னை யுணர்த்து மோசையாவது தன்பிறப்பையு மாத்திரையையுமே யறிவித்துத் தன்னைப் பெற நிகழுமோசை. சொற்கியையு மோசையாவது, ஓரெழுத்தொருமொழி முதலியவாய் வருமோசை. இனிச் சொல்லென்றதி யாதனையெனின் எழுத்தினானாக்கப்பட்டிருதிணைப் பொருட்டன்மையு மொருவனுணர்தற்கு நிமித்தமாமோசையை இவ்வுரைக்குப் பொருள் சொல்லதிகாரத்துட் கூறுதும். ஈண்டு- ‘டறலள’ வென்னுஞ் சூத்திர முதலியவற்றான் மொழியாக மயங்குகின்றனவு மவ்வாக்கத்தின்கணடங்கு மென்றுணர்க. எழுத்து - சொல்லிற் கவயவ மாதலி னதனை முற்கூறி யவயவியாகிய சொல்லைப் பிற்கூறினார். இனிப் பொருளென்ற தியாதனையெனின் சொற்றொடர் கருவியாக வுணரப்படு மறம் பொருளின்பமு மவற்றது நிலையின்மையு மாகிய வறுவகைப் பொருளுமாம். அவை பொருளதிகாரத்துட் கூறுதும். வீடு கூறாரோவெனின் அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் வீடுபேற்றிற்கு நிமித்தங் கூறுதலன்றி வீட்டின்றன்மை தமிழாற் கூறாரென்றுணர்க.

அது -

‘அந்நிலை மருங்கி னறமுத லாகிய,
மும்முதற் பொருட்கு முரிய வென்ப’

என்பதனானுணர்க.

இக்கருத்தானே வள்ளுவநாயனாரு முப்பாலாகக் கூறி மெய்யுணர்தலா னிமித்தங் கூறினார்.

செந்தமிழ் - செவ்விய தமிழ். முந்து நூல் - அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசை நுணுக்கமும். அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன - எழுத்துச் சொற்பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பனவியலும் சோதிடமுங் காந்தருவமும் கூத்தும் பிறவுமாம்.

புலமென்றதிலக்கணங்களை. பனுவலென்ற தவ்விலக்கணங்க ளெல்லா மகப்படச் செய்கின்றதோர் குறி. அவை யிதனுட் கூறுகின்ற வுரைச் சூத்திரங்களானு மரபியலானு முணர்க.

பாண்டியன்மாகீர்த்தி யிருபத்து நாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானாதலி னவனு மவனவையிலுள்ளோரு மறிவுமிக்கிருத்தலி னவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்