பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அணை சிறப்புப்பாயிரம். பூமிசையகலா நான்முகத்தொருவன் படைப்புழியின்சொலி னியக்கத்தெரிப்பான் இருக்கையாய் வாழிய ரெனாமேனிறுவிய வேங்கடங்குமரி யோங்கியமேல்கீழ்ப் புணரிசூழ்வரைப்பி லணவியமுத்தமிழ் ஆன்றதொல்கடலுட் டோன்றுறுமைம்பொருள் ஈரைஞ்ஞூற்றுச் சீரமை பணமணிச் சூட்டருணெட்டுடற் கோட்டமில்பாப்பர சேந்துபுகிடந்தமாண்ப மைநீணிலத் தேவருமுணராத் தாவரும்பயன்கொள் உயிர்தொறுஞ்சிவணிய செயிரறுபொது நட நவிலுந்தனிமுதல் தவலருங்கைவலத் தமிழிசைகதுவிய தமருகத்தெழுமேழ் இரட்டியவெழுத்தொலி தெருட்டியவாரிய நெடுமொழிப்பாணிநி மடனிகுமுதியோன் போன்மெனலிருந்தமிழ்ப் பான்மை முழுதுணர் முகட்டுயர்பொதியப் பொகுட்டுழியிருந்தருள் பரமாசிரியற் பற்பகல்வழிபட் டரும்பெறலியல்பெறீஇப் பொருந்திய பன்னிரு மாணவக்குழாத்து ணீணிலைகொளுவிய அல்காப்பெருஞ்சீர்த் தொல்காப்பியமுனி தற்பெயர்தோற்றி யற்புறத்தந்த ஐந்திரநிறைந்த வியந்தகுநுண்பொருட்