பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழுவகங்கவரா மகிழ்தலைசிறப்ப ஒருதான்கண்டவை பிறருந்தெரிகெனு நீக்கமிலுள்ளத் தார்வநன்தூக்கத் தண்டரும்பெயரிய பண்டையோர் நூல்வழிப் பன்னுதொல்காப்பிய நன்னூலெனவும்

ஐந்திரபாணி நீயமெனவும் சமரசபாடிய சித்தாந்தமெனவும் வளம்பாடிலாத இளம்பூரணமும் மெய்ச்சொலாற்பழிச்சு நச்சினார்க்கினியமும் வானோர் மாண்பமை சேனாவரையமும் சங்கர நமச்சி வாயமுமென்றிவை. ஐந்துரையுந்தொகுத் தின்புறவுண்மையின் பூரணவிருத்தி யெனவும்பெயர்புனைந் திந்நூலியற்றி யெழுதாவெழுத்திற் பன்னூனெறியிற் பதித்து நல்கினன்; வளைநீர்க்கருங்கடன் மறிதிரைகொழிக்கும் உளைவுறீஇப்பணில முயிர்த்தநித்திலம் கருங்கோட்டுப்புன்னை நறுங்கேழரும்பர் குருகினமுயிர்க்கும் பரூஉமணியொண்கரு இஃதஃதெனாவயிர்ப் புறவயின் றொறுந்தொகூஉம் நறைவார்சோலைப் பிறையாறெனுநகர் வதிதருசோழ வேளாளமரபிற் பதிதருதாண்டவ ராயவேள் பயந்த நாட வருசுவி சேடசித்தாந்தி செங்குவளையந்தார் தங்குமணி மார்பன் நாமவேலைப் புவிநயக்கும் சாமு வேலெனுந் தகைமையோனே. இஃது இவரது இஷ்டராகிய புரசை அஷ்டாவதானம் சபாபதிமுத லியாரவர்கள் இயற்றியது.

  • சங்கர நமச்சிவாயருரையில் சிவஞானமுனிவருரையுமிருக்கின்றதாகலின்.