ஜெயிலர் செய்த அக்கிரமம்.
ஒவ்வொரு காலையும் ஒவ்வொரு மாலையும்
என்னுடை அரங்கிற் கேகி அன்புடன்
என்னுடை உணவும் இதரகா ரியங்களும்
விசாரித்து வந்தனன் வெள்ளை காட்ஸன்.
அந்நாள் தனில்அவன் சென்னைமா காணச்
சிறைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாய்ச் சென்றனன்.
சிறையின் டாக்டர் சிறையின் சூப்பிரண்
டெண்டாய் *ஆக்டிங் செய்தான். ஜெயிலர்
தன்னைக் குத்தமுன் மன்னிய மூவரில்
இருவரை அடித்தான் மருநிறை கைதியால்.
உடனென் தந்தைக் குடனவண் வரும்படி,
தந்தி அனுப்பிச் சாற்றினேன் மறைவில்.
எந்தை வந்தனன்; என்னைக் கண்டனன்.
ஜெயிலர் செயலெலாம் செப்பி அவன்எனை
ஜெயிலின் கைதிகள் சிலரைத் தூண்டி
அடிக்க முயல்வ தாகவும் அதற்குப்
பெரிய கலெக்டர்பால் பிராது கொடுக்கவும்
உரிய தந்தைபால் உரைத்தேன். அதனைச்
செவியுட் கொண்ட டிப்டி ஜெயிலர்
நொடியில் ஜெயிலர்பால் நுவன்றனன். அவன்தான்
சூப்பிரண் டெண்டா ஆக்டிங் செய்த
டாக்டர் இடத்தே சாற்றினன். அவன்எனை
விளித்து, “நின் தந்தைபால் விளம்பிய துண்மையா -
- ஆக்டிங் - பதிலாக வேலைப் பார்த்தல்.
132