இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆவலைக் கொண்டே அமைத்தேம் "ஜனசங்கம். பிறரின் கப்பலைப் பேணிய சிலரும் அறவதை விடுத்தன் றடைந்தனர் எம்மை. இச்செயல் கண்டதும் எழுந்தேவர் ஆர்த்தனர்; "நிச்சய மாயிவன் நினைத்தது முடிப்பன்; விரைவினில் இவனை; வெளிவர விடாது கரையச் செய்து களிப்போம்" என்று சூட்சியிற் பலரும் துணிந்தனர்; அதன்பின் காட்சிகள் யாவும் களிக்கத் தக்கவே. || வெளுத்தவ ரெல்லாம் வெளிக்குப் பயத்தால் கொளுத்தப் பட்டதாக் கூத்தாடித் திரிந்தனர்.
•ஜனசங்கம்-சென்னை ஜனசங்கத்தின் தூற்றுக்குடிக் கிளைச்சங்கம். 1அவர்-வெள்ளையர். 1வெளிவரவிடாது-சிறையுள் இட்டு. ||வெளுத்தவர்-வெள்ளையர்.
58
58