பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடற்றிரட்டு

தன்னுடைய மெய்ச்சொருபஞ் சச்சிதா நந்தமென்று
மன்னியம்போற் றோன்றுமெலா மஃதென்றுந் - தன்னையுறுந்
துக்கமெலாங் கானலினீர்த் தோற்றமென்றுங் கண்டுணர்ந்து
துக்கமற்று வாழ்வான் சுகித்து.

துக்கமுற்று நீங்கிச் சுகமுறுதன் முத்தியென்றுந்
துக்கமற்ற தன்மை சுகமென்றுந் - தக்கமறை
கண்டோ ருரைத்துள்ளார் காணவதை யன்பன்றி
யுண்டோ பிறிதுநெறி யொன்று. அ.

அன்பாவ தியாவர்க்கு மாருயிரின் மிக்கதுவா
மின்பா மதன்சொருப மெஞ்ஞான்று - மென்பென்ப
தன்றியுட லென்னா மதுபோல வேயன்பு
மன்றியுயி ரென்னா மறி.

ஏவருமே தன்னுயிரென் றெண்ணியன்பு செய்யவவர்
தூவுடையதன்னுயிராய்த் தோய்ந்து நிற்பர் - பூவிலுள
யாவருமே சின்மயமென் றின்புருவ னாதலினா
லேவரையு முன்னுயிரென் றெண்.


உண்மை,உண்மையினை யென்று முரைப்பதுவு முன்னுவது
முண்மையெனச் சொல்ப வுடைமைபெற வண்மையுறத்
திண்மையுறத் துன்பமறச் சிந்தித்தே யஃதுரைத்த
லுண்மையன்று நன்றா வுணர்.

6