பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவளது நற்செயல்களைப்பற்றிய பாக்கள்

மலையாள தேசமுள மாவளங்க ளெல்லாங்
கலையாயு நுண்மதியாற் கண்டு - சிலகால
மின்பாக் கழியென் றிருதோ ழியர்சகித்
மன்பா யனுப்பினே னங்கு.

இருந்தநா டன்னிலெலா மென்ற னினைவே
பொருந்திநாள் போக்கினளாம்போத-வருந்தவத்தோர்
செய்தொழிலெல் லாமுமச் சிற்பொருளை யுன்னலல்லா
லெய்துநினை வுண்டோமற் றென்று.

நற்சரிகைத் துப்பட்டா நாரியர்கள் பூண்முண்டோ
டெற்சரிகை வேட்டி யிவையெல்லாந் - தற்சரிரங்
கொண்டவெனக் கேகொண்டாள் கொண்டிலளொன் றுந்தனக்கின்
றுண்டோ வுலகிலிவட் கொப்பு.

ஓரிரவி லோரிடத்தி லொன்றா யுறங்குகையி
னாரியையு மென்னையுமே நன்றாகக் - கூரியதோர்
செந்தேள் கொடுக்கதனாற் சீறியே கொட்டிற்றா
லெந்தேவா வெம்மையா வென்று.

இருவருமே சத்தமிட்டோ மேந்திழைதா னோவோ
பெருவருத்தநேர்ந்ததின்றுபேதை - யொருத்தியையே
கொட்டிற்றா மற்றென் கொழுநனையுங் கொட்டிற்றென்
றெட்டிவீழ்ந் தேங்கி யெழுந்து.

என்னவரை யென்னுயிரையென்னுடைநல் லன்பரைமற்
றென்னவிதங்கொட்டிற்றோவென்செய்வே- னென்னத்
தியங்கினாள் தேம்பினாள் செய்தவெலா மெண்ணி
மயங்குகின்ற தென்னன் மனம்.

11