பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு
இன்றிருந்தார் நாளைக்கிங் கில்லாமற் போவதையு
நன்றிருக்கத் தீதை நவில்வதையு - மென்றுந்
தியங்கவே யேழைகளைச் செய்வதையும் பார்த்து
மயங்குதே யென்றன் மனம்.
ரு
தேவர் முனிவர் செகத்திலுள பல்லுயிர்க
டாவரங்க ளெல்லாந் தனதுருவம் - யாவர்க்குந்
தன்னைப்போ லன்புசெய்து சாந்தநிலை யுற்றிருக்க
வுன்னுவதே மாந்தர்க் குயர்வு.

மனைவியோடு ஆழ்வார் திருநகரியிலிருந்து வந்த
மார்க்கத்திற் பாடிய பாக்கள்.
தானே தனித்துத் தரணியெலாங் காக்குமொரு
கோனே நிகர்த்துக் குடியோம்பும்- வானே நீ
யென்னுரியா ளூரிலிருந் தின்றுவரு மார்க்கத்தி
அலுன்னுரிய பெய்த லொழி. .
நீயின்றி வானே நிலைக்குமோ விவ்வுலகந்
தாயின்றிப் பிள்ளை தழைக்குமோ - ஈயுஞ்
செயலென்றுங் கொண்டோய் சிறப்புடையாட் காகப்
பெயலின்று நீப்பாய் பெயர்ந்து.
பாளையங்கோட்டை ஸ்ரீ பி. நாராயணசாமி நாயடு
அவர்கள் கிரகப்பிரவேசத்திற் பாடிய பா.
நானிலத்தைக் காத்தருளு நாரணனா மம்பெற்று
நானிலத்தைக் காத்தளிக்கு நற்றொழிலைத் - தானடத்து
மன்னனது மாநலத்தான் மாலருளாற் பெற்றிடுக
மன்னனது வாழ்வைநிகர் வாழ்வு.
18