பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு
ஸ்ரீ சிவபெருமானை நோக்கிப் பாடிய பா.
என்னுயிரே யென்னறிவே யிவ்வுலகி லெவ்வுயிர்க்குந்
தன்னுயிரா யுள்ளுள்ளே சார்ந்துநின்று-மன்னுயிர்கள்
இன்பமுறக் காத்தளிக்கு மென்சிவமே யென்னாட்டின்
றுன்பமற நல்காயோ துப்பு.
ஸ்ரீ விஷ்ணுவைத் தொழுவோர் அடையும் பலன்கள்.
சீரருணல்கும்விண்டுத் தேவனைத் தொழுவோரெல்லாம்
பேரருட் செல்வ ஞானம் பெற்றிவண் சுகமாவாழ்ந்து
கூரிரு ணீக்கி யின்பங் குலவுநல் லுலகம் புக்குப்
பாரினி லெவரு மேத்தப் பண்புறு வீடுஞ் சேர்வர்.
கடவுளும் வாணியும் ஒன்றெனல்.
கல்வியறி வாய்நிற்குங் காரணத்தால் வெண்கமலச்
செல்வியெனப் பேர்கொள்ளுஞ் சிற்பரந்தான் - கல்வி
யடைவதற்கு நற்றுணையா மஃதடைந்த பின்ன
ரடைவதற்கு நற்பொருளா மஃது.
வாணியைத் தொழுவோர் அடையும் பலன்கள்.


கல்வியறி வாய்நின்று கல்வியெலா மீகின்ற
செல்வியடி யுள்வைத்துச் சிந்திப்போர் - கல்வி
யறிவுற்று நன்றாற்றி யாதிநிலை சார்ந்து
செறிவுற்று வாழ்வர் தினம்.
20