பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பொருள் வாழ்த்து

சூரியனாப்பல்லுருயிந்தோன்றியிவணின்றிலங்கப்
பாரியதோர் தண்ணளியைப் பாலிப்போய்-வீரிய
மில்லாதே தாழ்வுற்ற வேழைக்குத் துன்புறுத்து
மெல்லாமே தந்ததிங் கென்.
கக
காண
சூரியன் பாலும் சூடாகி யெஃதினுந் தோய்ந்து
நிற்போய், காரிய மாகவுங் காரண மாகவுங்
நிற்போய், சீரியர் தம்மொடுந் தீயவர் தம்மொடுஞ்
சேர்ந்துநிற்போய், பாரியை மக்களைப் பண்டுபோற்
சேரநான் பார்த்தருளே.
கஉ
மதியாகி வான்மிசையு மண்மிசையு முள்ளா
ரிதமாக நிற்கவரு ளீவோய் - நிதமாகத்
துன்பமிக வுண்டேற்குத் தூயமனைசேர்ந்திருக்கு.
மின்பமின நல்காத தென்.
கூகூ
பூரணச்சந்திரன் போதரத் தண்மையாப் பொங்கி
நிற்போய், ஆரணந் தம்முளு மன்பர்தந் நெஞ்சுளு
மாடிநிற்போய், வாரண மேறுமுன் வாடல்போற் றுன்
புன்முன் வாடநிற்போய், ஓரணங் கென்னுட னுற்
றிடு நல்விதி யூட்டுவையே.
கச
வான்குழுவாச் சேர்ந்தொருவர் வையாத்தீபமென
மீன்குழுவா நின்றொளியை வீசுவோய்-நான்குழு
நீங்கிச் சிறைநின்று நீங்காத துன்பமுறும் [வை
பாங்கென்ன செய்தேன் பகர்.

29