பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. மு. ம. அறம்வளர்த்த சுந்தரம் பிள்ளை யவர்களுக்கு எழுதிய பாக்கள்.

அறம்வளர்த்த சுந்தரமே யாவையென நிற்கும்
அறம்வளர்த்த சுந்தரமே யன்பின் - திறம்வளர்த்த
கோவேயென் உள்ளத்தைக் கொண்டங் குவந்துறையும்
தேவேநின் தாளென் சிரம்.

அன்னை தந்தை யாவரினும் ஆதரங்கொண் டிவ்வுலகில்
என்னைமிகப் பேணுகின்ற என் அன்ப -நின்னைக்
குலதெய்வ மாவைத்துக் கும்பிட்டு வாழ்வேன்
பலநாளும் அன்பால் பணிந்து.
கடவுளரும் வேண்டினன்றிக் காப்பதிலை என்று (யும்
திடமுடனே கற்றறிந்தோர் செப்பும் - தொடர்மொழி
பொய்யாக இன்றென்னைப் போந்தளித்த நின்னையன்றி
மெய்யாய தெய்வமுண்டோ வேறு.
15
நீயெனக்குச் செய்தநன்றி நீள்நிலத்தில் பெற்றெடுத்த
தாயெனக்குச் செய்தவகை தான் அறியேன் - காயம்
எடுக்கும் பிறப்பெல்லாம் என்மனத்தில் நின்னைத்
தடுத்திருத்தி வாழ்வேன் தழைத்து.
P
அறம்வளர்த்தல் எஞ்ஞான்றும் அன்புடைமை என்ற
திறம்கிளத்த வந்தவுயர் தேவே - பிறரின்
நலம்கருதி னார்தம் நலம்கருதி வாழ்நின்
நலம்கருதி வாழ்வேன் நயந்து.
3
33